கலைஞரின் சட்டமன்ற உரைகள்
453
பத்திரிக்கையாளர்கள் தவறிப் போட்டுவிட்டார்கள் என்று சொல்ல முடியாது. அதைத் திருத்திக் கொள்வதில் என்ன தவறு? வாய் தவறிச் சொல்லிவிட்டேன், பார்க்காமல் சொல்லி விட்டேன், அல்லது எழுதியவர் ஏட்டைக் கெடுத்தார் என்பது போல் எழுதிக் கொடுத்தவர்கள் அப்படிக் குறிப்பு எழுதிக் கொடுத்து விட்டார்கள் என்று சொல்லி, மாநில மக்களுடைய நல்வாழ்விற்காக, மக்களுடைய நல உரிமைக்காக, அந்த உண்மையை ஒப்புக்கொண்டால், எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறாரே என்று ஒப்புக்கொண்டால் என்ன கௌரவம் பாதித்து விடும் என்பதை தயவுசெய்து எண்ணிப்பார்க்க வேண்டும்.
இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். நம்முடைய பேராசிரியர் அவர்களும் ம் மற்றவர்களும் ஒன்றைச் சொன்னார்கள். தமிழ்நாட்டில் முந்தைய அரசு கட்டிடங்களுக்கு வைத்த உயிரோடு உள்ள தலைவர்களுடைய பெயர்களை எல்லாம் எடுக்கவேண்டுமென்று உத்தரவு போடப் பட்டிருக்கிறது. இது நியாயம்தானா, தேவைதானா என்ற ஒரு பிரச்சினையை இங்கே எழுப்பினார்கள். நான் ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். உயிரோடு உள்ளவர்களுக்கு எதற்காகச் சிலைகள், உயிரோடு உள்ளவர்களுக்கு எதற்காக மன்றங்கள், இப்படிக் கேட்கப்பட்ட காலம் ஒன்று இருந்தது. நம்முடைய முதலமைச்சரவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திலேயிருந்த காலத்திலே எம்.ஜி.ஆர். மன்றங்கள் வைக்கப்பட்டபோதுகூட இன்றைக்கு அவருடைய கட்சியிலே மிகத் தீவிரமாக இருக்கின்ற நண்பர் நம்முடைய எஸ். ஆர் இராதா போன்றவர்கள் நண்பர் சம்பத் அவர்களோடு சேர்ந்து கொண்டு மன்றங்களை உயிரோடு இருப்பவர்களின் பெயரால் திறக்கக்கூடாது என்று மிக முனைப்பான அரசியல் முன்னணி வீரராகத் திகழ்ந்தார்கள். ஆனால் எம்.ஜி.ஆர். மன்றங்கள் ஆயிரக்கணக்கில் வைக்கப்பட்டன. இது அரசியல் கட்சி விவகாரம்.
ஆனால் ஆட்சி என்ற முறையிலே பார்த்தாலும்கூட இவைகளை வைப்பதிலே என்ன தவறு? நான் என்னுடைய