உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/455

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

454

அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது

பெயர் வைக்கப்பட வேண்டுமென்பதற்காகச் சொல்லவில்லை. என்னுடைய பெயரை எடுத்து விடுகிறார்களே என்ற கவலையால் சொல்லவில்லை. நா நான் உளம்திறந்த ஒரு நான் அறிக்கையே விட்டேன். ஏற்கனவே முதலமைச்சர் அவர்கள் பெரியார்சிலை திறப்பு விழாவில் பேசுகின்ற பொழுது கருணாநிதி சிலை பற்றிப் பிரச்சினைகள் வந்திருக்கின்றன, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்பார்க்கிறேன் என்று பேசியிருக்கிறார்கள். அதைக்கூட எதிர்பார்க்க வேண்டாம், தயவுசெய்து இப்பொழுதே எடுத்து விடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்தேன். அந்தச் சிலை இருப்பதால்தான் கருணாநிதியின் பெயர் இருக்கும் என்றால் அப்படிப்பட்ட ஒரு சிலை எனக்குத் தேவையில்லை.

LU

இப்பொழுது உயிரோடு

அதைப்போலத்தான் உள்ளவர்களின் பெயர்கள் கல்லூரிகளுக்கோ, பள்ளிகளுக்கோ, பாலங்களுக்கோ இருந்தால் எடுத்துவிடவேண்டுமென்று அறிக்கை விடப்பட்டிருக்கிறது. ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. அண்ணா அவர்கள் காலத்திலே அண்ணா அவர்களின் பெயரால் கல்லூரி அமைந்தது, காமராஜ் அவர்களுடைய காலத்திலேதான் காமராஜ்சாகர் என்று பெயர் வைக்கப்பட்டது. காமராஜ் அவர்களுடைய காலத்திலேதான் காமராஜருடைய சிலை அவர் உயிரோடு இருந்தபொழுதுதான் திறக்கப்பட்டது. காமராஜர் மின்சார நிலையம் என்று திருச்சியில், வேலூரில், பலயிடங்களில் மின்சார நிலையங்களுக்கு, அலுவலகங்களுக்கு காமராஜர் பெயரால் அவர் உயிரோடு இருந்தபொழுது அந்தப் பெயர் இடம்பெற்றிருக்கிறது. திருச்சியில் காமராஜ் வளைவு அவர் உயிரோடு இருந்தபொழுதுதான் வைக்கப்பட்டது இங்கேயிருக்கின்ற இராஜாஜி ஹாலுக்கு இராஜாஜி அவர்கள் உயிரோடு இருந்தபொழுதுதான் அந்தப் பெயரைச் சூட்டினார்கள்.

நிை

1035 T

இவைகளையெல்லாம் நான் வாதிடுவது என் பெயர் இருக்க வேண்டும் என்பதற்காக அல்ல. என்னுடைய பெயரை எடுத்து விடுங்கள். என்னுடைய பெயரின் அடிச்சுவடே இல்லாமல் அழித்து விடுங்கள், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.