உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரசு தீர்மானம், சட்ட முன்வடிவுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 2.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

455

ஆனால் எனக்கு முன்னால் பேசிய பேராசிரியர் அவர்கள் குறிப்பிட்டதைப்போல, பல ஆண்டுக்காலம் தேசத்திற்காகத் தொண்டாற்றிய பெரியவர் பக்தவச்சலம் போன்ற பெரியவர்களின் பெயர்கள் நீக்கப்பட வேண்டுமா? பேரறிஞர் அண்ணா அவர்களின் அருமைத் துணைவியார் அன்பிற்குரிய அண்ணியார் அவர்களின் பெயரைத் தாங்கி இராணி அண்ணா என்ற பெயரில் இருந்தால் அந்த மண்டபங்களின் பெயர்கள் மாற்றப்பட வேண்டுமா? எனக்கும் நாவலருக்கும் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனாலும் அவரை நடமாடும் பல்கலைக்கழகம் என்றும், அவர் நல்ல தமிழ் அறிந்தவர், அவர் ஒரு முன் மாதிரி என்ற வகையிலும், நாவலர் நெடுஞ்செழியன் முன்மாதிரி அரசினர் பள்ளி என்ற பெயரை நானேதான் சூட்டினேன். அதை எடுத்துவிட வேண்டுமா?

இவைகளையெல்லாம் தயவுசெய்து எண்ணிப் பார்க்க வேண்டும். பெரியாருக்காகக் கட்டப்பட்டிருக்கிற இடம் இருக்கிற வரையில் காமராஜருக்காகக் கட்டப்பட்டிருக்கிற இடம் இருக்கிற வரையில் காமராஜருக்காகக் கட்டப்பட்டிருக்கிற சதுக்கம் இருக்கிற வரையில், இராஜாஜிக்காக கிண்டியிலே யிருக்கிற ஆலயம் இருக்கிற வரையில், பூம்புகார் இருக்கிற வரையில், பாஞ்சாலங்குறிச்சியிலே கட்டப் பட்டிருக்கிற கட்டபொம்மன் கோட்டையிருக்கிற வரையில், நுங்கம்பாக்கத்திலே இருக்கிற வள்ளுவர் கோட்டம் இருக்கிற வரையில், அங்கேயெல்லாம் கருணாநிதி என்ற பெயர் இருந்துதான் கருணாநிதி விளம்பரம் ஆகவேண்டுமென்று இல்லை. நான் அவைகளைப் பற்றி கவலைப்படவில்லை. ஆனால், உயிரோடு இருக்கிறவர்களுடைய பெயர் வைக்கப்பட வேண்டுமா என்பதற்குப் பேரறிஞர் அண்ணா அவர்கள் இராஜ்ய சபையிலே பேசினார்கள். அதுவும், இராமச்சந்திரன் அவர்கள் வெளியிட்ட புத்தகம். அதிலே அவர்கள்

குறிப்பிட்டிருக்கிறார்கள்.

'.........For the last six years we have been controlling the Madras Corporation, and yet we were not politically peevish enough to create any sort of political bickering. It was during the regime