பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அருணகிரிநாதர் படித் தமக்கு அதுக்கிரகஞ் செய்ததும் அங்கு நினைவுக்கு வர, மேலே (92) வயலூரைப்பற்றி எழுதியுள்ள இடத்திற் குறித்தபடி (பக்கம் 64), இரு பொருள் படும்படி அத்தன் முற்புகழ் செப்ப அநுக்ரக * - சத்துவத்தை யளித்திடு செய்ப்பதி மயிலேறி (882) trனத் துதித்தார். பின்பு, சுவாமி மலையை மீண்டும் தரி சித்து வயலியில் வாழ்வே (208) எனவும், வயலி அக்கீசர் குமர கடம்ப வேலா (209) எனவும், வயலூர்ப் பெருமானை நினைந்து பாடினர். பின்பு (152) திருநாகேச்சுரத்தை (877) அடைந்து, யார் யார் கடையாய பிறப்பை அடைவார்கள் என்பதை அடைவுபடக் கூறித் தம்மை வயலூரில் ஆட் கொண்டு திருப்புகழ் பாடவைத்ததைப் பாராட்டி ‘'வேலா யுதா மெய்த் திருப்புகழ்ப் பெறு வயலூரா" என வாம்க் வேற்பொறி மயிற்பொறி பொறிக்கப்பெற்றது பின்பு குற்ருலம் என வழங்கும் (153) திருத்துருத்திய்ை (850) அடைந்தார். இத்தலம். மாயூரத்துக்கு அருகில் உள்ளது. மூவர் தேவாரமும் பெற்றுள்ளது. நீ சுந்தர் மூர்த்தி சுவாமிகளின் உடற்பிணி தீர்ந்த தலம். இத்தல்த் தில் முருகவேள் அருணகிரியாரது கனவில் தோன்றி, 'அன்ப ! நீ எனக்கு அடைக்கலப் பொருள் ஆவாய்; (43) எட்டிகுடிப் பதியிலும், (136) பொதிய மலையிலும் நீ விரும் பிய வண்ணம் இதோ (உன் தோளில்) நமது வேற் பொறி, மயிற்பொறியை இட்டோம். முத்தி தரவல்ல நமது அநுபூதியையும் அருள் மயமாம் நமது திருப்புகழையும் ஒதும் பணியையே நீ பணியாகக் கொள்வாயாக’ என்று அருளி மறைந்தார். அருணகிரியாரும் விழித்தெழுந்து தமது தோளில் வேல் அடையாளம் மயில் அடையாளம் இருக்கக் கண்டு மெய் சிலிர்த்து உள்ளங் குளிர்ந்து 'முருகா! நாயனய என்னையும் பொருட்படுத்தி அழைத்து, அடைக்கலப் பொருள் போல அருமை பாராட்டி, வேற் பொறி, மயிற்பொறி யிட்டனையே’ என மகிழ்ந்து