பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


i20 அருணகிரி நாதர் எனச் சிறப்பித்தார். இத்தகையவாக்கு அருணகிரியார் ஒருவருக்கே உரிமையாய் இன்றும் விளங்குகின்றது. பின்பு, அருணகிரியார் திருவிரிஞ்சையினின்றும் புறப் பட்டுத் (187) திருவலம் (669) வந்து தரிசித்துத் திருமா லும் பிரமனும் வலம் வந்து பூசிக்க வீற்றிருக்கும் சிவனது மூதுார் என்றும், மாதர்கள் நடன மியற்றிப் பணியும் பதி என்றும் திருவலத்தைச் சிறப்பித்துப் பாடி (188) வள்ளி மலைக்கு (313-323) வந்தார். 20. வள்ளிமலை-திருத்தணி : (2 தலங்கள்: 188-189) வள்ளி மலைக்கு வந்ததும் அம்மலையை வலம் வந்து, மலை முழுதும் முற்றும் ஆய்ந்து தரிசித்து, வள்ளியம்மையை மணக்க முருகபிரான் தணிகையினின்றும் தாமே வள்ளி மலைக்கு வந்து வள்ளியோடு பல லீலைகள் செய்து விளை யாடின தலமல்லவா இது என மகிழ்ந்து, 'முருகா நீ எனக்கு ரகசியம் என்று உபதேசித்த பொருள் நான் வள்ளி மலையைக் கண்டவுடனே வெட்ட வெளிச்சமாய் விளங்கி விட் டது. நீ உபதேசித்த உபதேசமாவது யாரொருவர் யான்-எனது என்னும் ஆணவ நிலை அற்று என்னை வழிபடு கின்ருர்களோ அவர்களுக்கு நான் எளியன்-குற்றேவல் செய் பவன்' என்பதல்லவா! அவ்வகையில் உண்மை வழிபாடு செய்த பிராட்டி வள்ளிப்பிராட்டி. ஆதலாலன்ருே நீயே தணிகையினின்றும் வள்ளி மலைக்குத் தனியே சென்று, வள்ளியின் சன்மார்க்கத்தை உகந்து மெச்சி வள்ளியின் பொருட்டுப் பல குற்றேவல்களைச் செய்து, பல விளையாட்டு கள் விளையாடி அந்த நங்கையைத் திருமணமுஞ் செய்து உனக்குகந்த தேவியாகத் திகழும்படி வலப்பாகத்தே வைத் தாய் ! ’ என்று தெளிவாக அத் தெய்வ ரகசியத்தை வெளி யிட்டு (கந். அலங். 24) 'கின்னங் குறித்தடியேன் செவி நீயன்று கேட்கச் சொன்ன குன்னங் குறிச்சி வெளியாக்கி விட்டது; கோடுகுழல் சின்னங் குறிக்கக் குறிஞ்சிக் கிழவர் சிறுமிதனை முன்னங் குறிச்சியிற் சென்றுகல் யாணம் முயன்றவனே!"