பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/149

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


130 அருணகிரிநாதர் ணன், வடவேங்கடத்தில் உறைபவன், உயர்சார்ங்க, கட்க, கரதலன் -என வருவதால் தெரிகின்றது. ஒரு காலத்தில் முருகபிரான் பார்வதி தேவியுடன் முனிந்து பிலத்தின் வழியே வந்து ஒரு குகை வழியாகத் திருவேங்கடத்துக்கு வந்த சரிதத்தைத் திருவேங்கடத்துப் பதிகத்தில், 'குகை வழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே '-என்னும் அடியிற் குறித்துள்ளார். எந்தை யார் பதிப்பில் 245-ஆம் பாட்டின் கீழே குறித்துள்ள 'அண்ட மன்னுயிர் என்னும் கந்த புராணச் செய்யுளையும் பார்க்கவும். மேலும் வேங்கட மாமலையில் உறையும் பெரு மாளின் (நமது முருகரின்) அடியார்க்குதவும் பெருங் கருணையை வேண்டிய போதடியர் வேண்டிய போகமது வேண்ட வெருதுதவு பெருமாளே (246, 247) என்னும் அருமை அடியால் ஒரு பாடலுக்கு இரு பாடல் முடி பாக முடித்து உலகுக்கு எடுத்துக் காட்டியுள்ளார். அந்த வாக்கின் உண்மை வேங்கடேசப் பெருமாள்' என்னும் திரு நாமமுடைய மூர்த்தியின் மூலம் இன்னும் ப்ரத்யகூஷமாகக் காண்கின்ருேம். உள்ளதை உள்ளபடியே எடுத்துக் காட் டும் திறத்தை-இருமல் நோயை "எலும்பு குலுக்கி விடும் இருமல் ' என்னும் சொற்ருெடரிற்-காணலாகும் (245). திருவேங்கடத்தினின்றும் (192) திருக்காளத்திக்கு (587589) வந்து தென் கயிலாயம் என அதைப் போற்றி, நரசிம் மத்தை அடக்கிய வீரபத்திரர் சூரியனைக் கடிந்த வினை ஒழி யத் தவஞ் செய்த தானம் இது எனப் பொருள் படுகின்ற சரித்திரம் ஒன்றையுங் குறித்தனர் 1589) இச்சரித்திரத்தின் விவரம் இன்னதென விளங்கவில்லை. பின்பு, காளத்தியை விட்டு வடக்கே வெகு துாரஞ் சென்று (193) திருப் பருப்பதம் எனப்படும் பூநீசைலம் (244) என்னும் மஹா கூேடித்திரத்தை அடைந்து அது காடடர்ந்த மலைப் ப்ரதேசம் என்பதைப் "பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள் பிணையமர் திரும்லை' எனப்பாடி விளக்கினர்.