பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அருணகிரிநாதர் என இகழ்ந்தார்க்கே வள்ளியம்மையின் அதுக்கிரகம் கிட் டும் என்கிருர். வள்ளியம்மையை மணந்து முருகர் பெற்ற 1ஐந்து சீதனங்களாவன:-(1) ஊது கொம்பு. (2) சேவற் கொடி. (3) வேலாயுதம். (4) மயில் வாகனம். (5) மலையாட்சி. செய்யுள் 9. (சிலை மத): தென்றலை மயிலின் உச் சிட்ட எச்சில் என்ருர். மயிலின் உச்சிட்டம் (எச்சில்)பாம்பு; பாம்பின் எச்சில்-வாயு. செய்யுள் 10. (திரளக்): இது அருமையான அவை யடக்கச் செய்யுள். முருகன் புகழைத் தாம் பாட முயல்வது கையாற் கடலை நீந்த முயல்வதற்கும் ஒரு குழந்தை தன் கையை நீட்டிச் சந்திரனைப் பிடிக்க முயல்வதற்கும் ஒப்பாம் என்கின்ருர். செய்யுள் 11. (திக்கத்தி): குறக் குறச் சத்திக்கு அத்திக் கோடு பறித்துக் கொடு ஆதி என்பதற்கு நூலில் எழுதி யுள்ள உரை பிழையுள்ளது. முதலில் உள்ள குற' என்ப தற்குக் குற்றுதற்கு (கு த் து த ற் கு-பொடியாக்குதற்கு) எனப் பொருள் கொள்ள வேண்டும். தினையைக் குற்றுதற்கு (உலக்கைக்குப் பதிலாக) முருகவேள் யானையின் கொம்பைப் பறித்து வள்ளியம்மைக்கு கொடுத்தாராம். இக்கருத்தைத் திருப்புகழில் களிற்று மருப்புலக்கையினில்-தினையிற் குறு வாளை (797) என வருமிடத்தும், கருங்களிற்றின் வெண் கொம்பால் கல்லுரல்வாய் நல்லார், பெருந்தினை வெண் பிண்டி யிடிப்ப... (20) என ஈங்கோய் மலை யெழுபதில் (11-ஆம் திருமுறை) வருமிடத்துங்காண்க. செய்யுள் 14. (செந்தில்): இது 'அலரறிவுறுத்தல்” என்னுந் துறை திருக் கோவையாரில் 'அலராயிரம்’ 1. தேவசேனைக்கு உரிய பொருள் நான்கு என்ருர். திருப் புகழ் 1008-ஆம் பாடலில் (நெடிய வடகுவடு):- அவை தாம் (1) இடி, (2) குலிசம், (3) ஐராவதம் (4) பொன்னு ல்கு. இடியு முன்ைமலி குஜிசமும்...க்ன கட இபமுழ் இரணிய தர்ன்னியும் உடையதொர் தனி யானை' (திணி யானை=தேவசேனை).