பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/176

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


156 அருணகிரிநாதர் களும் பஞ்சாகூடிர ஜெபம் செய்யலாம் என்பதும் அங்ங் னம் செய்தல் விசேடம் என்பதும் புலப்படுகின்றன. (ii) பூநீ சம்பந்தமூர்த்தி ஆண்பனையைப் பெண்பனை யாக்கிய லீலையும் கூறப்பட்டுளது. செய்யுள் 78. (திரிபுரத்) : தேவிக்கு உரிய நாள் * பூரம் என்பது இச்செய்யுளால் தெரிகின்றது. செய்யுள் 80. (சீராம) ; சீரா என்பது உடைவாள்; (பக்கம் 27 பார்க்க). அச்சிட்ட உரையில் சீர்ா-கவசத்தை, தொட்ட-புனைந்த என்பது சரியல்ல. சீரா=உடைவ்ாள்ை; தொட்ட-பிரயோகித்த-என இருத்தல் வேண்டும். எங் சூள் திருப்புகழ்ப் பதிப்பில் மூன்றம் பாகம்-கந்தரலங்காரம் 27-ஆம் செய்யுட் குறிப்புரையைக் காண்க. செய்யுள் 84, (சிவசிவ) : இறைவன் திருவருட் பிரகா சம் சேரச் சேரப் பொறுமை கூடிவரும் ; கோபம் அழிந்து போகும் என்பது இச்செய்யுளாற் பெறப்படும். செய்யுள் 91. (திகிரி) : அகப்பொருளில் :பகற்குறி'இடங்குறித்தல் என்னும் துறை இச்செய்யுள். நீ சம்பந்தர் தேவாரத்தில் குன்றியூர் குடமூக்கு என்னும் திருவலஞ்சுழிப் பாடற் கருத்தோ டொத்தது. 'திகிரி வலம்புரி சூடியவா நன்று சேடியின்றே-திகிரி=சக்கரம், மூங்கில் ; வலம்புரி= (வலம்புரிச்) சங்கு, நந்தியா வட்டப்பூ , மூங்கிலில் நந்தியா வட்டப்பூ அடையாளம் வைத்த (பகற்குறி) நன்று. சக்கரம் சங்கைச் சூடியது நன்று (வேடிக்கை) என்றபடி. சிராமலைக் கோவையில் சீரார் தருபுலி மேல்யானை வாழ்ந்திடச் செய்த னரே” என்றதுபோல ; புலி-வேங்கைமரம், மிருகம்; யானை-ஆம்பல் பூ, மிருகம்; வேங்கை மரத்தின் மீது ஆம் பற்பூ-அடையாளக் குறி-புலிமேல் யானை வாழ்தல்வேடிக்கைப் பொருள். செய்யுள் 92. (சேடி); இது புதல்வன்மேல் வைத்து அனந்த வழியூடல்' என்னும் துறை. வடசேடி, தென் சேடி என்பன வித்யாதரர்களுடைய மலையாகிய வெள்ளியம் பெருமலையிலுள்ள பெரும் பிரிவுகளின் பெயர் (தக்க