பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/44

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


26 அருணகிரிநாதர் கவாமிக% ஆட்கொண்ட தலமாகிய (3) திருவெண்ணெய் நல்லுரைத் (748) தரிசித்தனர். திருவெண்ணெய் நல்லூரில் நடன தரிசனம் இத்தலத்தில் முருக பிரான் தமது அற்புத மயில்மிசை திருநடன தரிசனம் தர, அதைத் தரிசித்து மகிழ்ந்து அந்த யோகானந்த நடன தரிசனத்தைக் குறிப்பிக்கும் பல பல தத் துவம்’ என்னும் பாடலைப் பாடித் திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத, மயிலின் மிசைக் கொடு திருநட மிட் டுறை பெருமாளே எனத் துதித்து வணங்கினர். பின்பு (4) திருநாவலூரைத் (747) தரிசித்துத் (5) திரு. வாமூர் (744) வந்து அத்தலத்தை மாது கதை வளர்க்குந் திருவாமூர்' எனக் கூறித் திலகவதியாரின் தொண்டைச் சிறப்பித்து, (6) வடுகூர் (745), (7) துறையூர் (746) என் னும் தலங்களைத் தரிசித்துத் (8) திருவதிகை (742, 745) சேர்ந்தார். 742-ஆம் பதிகத்தில் தேவியின் திருவருளால் சம்பந்தப் பெருமான் தேவாரப் பாக்களை அருளியதும், ஆற்று வெள்ளம் பெருகி வருதலைப் 'பறை' யறைவித்து முன்னதாகத் தெரிவிக்கும் வழக்கமும் குறிக்கப்பட்டுள. 743ஆம் பதிகத்தில் திரிபுரத்தை எரித்த தானம் திருவதிகை என்பதை விளக்கி, 'முருகா ! உனது பன்னிரு தோளை யும் பகர்தற்கு எனக்கு அருள் புரிய வேண்டும்’ என்னுங் கருத்துடன்-இறை நின் ஆறிரு புயமென உரை செய அருள்வாயே’,-எனப் பி ரார்த்தித்தனர். இப்பிரார்த்தனை 2. 707,708 எண்களுள்ள 'ஆதிமுதல்’, ‘சாலநெடு’ என் னும் பதிகங்களின் ஈற்றடிக்குக் கோவை_நகம் வாழ வந்த பெருமாளே” எனவும் பாடபேதம் இருத்தலால் அப்பதிகங்களையும் 738-ஆம் பாடலுடன் இத்தலத்துத் குக் கொள்ளலாம். கோயமுத்துார்ைக் கோவை என்கி ருர்கள். அத்தலத்துக்கும் இம்மூன்று பாடல்களைக் கொள்ளலாம்.