பக்கம்:அருணகிரிநாதர் வரலாறும், நூலாராய்ச்சியும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வரலாற்றுப் பகுதி 63 எனப் போற்றி முருகவேளின் உத்தரவு பெற்றுப், பொய்யா விநாயகரைத் தரிசித்து அருச்சித்துப் பெருமானே ! நீ சுப்பிரமணி படும் அப்புன மதனிடை இபமாகி (யானையாகி) . அந்தக் குறமகளுடன் அந்தப் பெருமானை மணம் புரிவித்தவ கனல்லவா ! உன்னை மட்டவிழ் மலர் கொடு பணிவேன். நீ தம்பி தனக்காக வனத்து அணைந்தவன் அல்லவா ! நீ என் றன் உயிர்க்கு ஆதரவுற்று அருளுக -எனப் பொருள் பெற்ற 'கைத்தல நிறைகனி ' (விநா-(1)), உம்பர் தரு : | விநா-(2)) என்னும் பதிகங்களைப் பாடிய பின்னர், அக்னீசுரர் என்னுந் திருநாமமுடைய சிவபிரானது சந்நி தானத்தில் நின்று அவரையும் போற்றி வணங்கினர். இவ ரது ஆராமையையும் உண்மைப் பத்தியையும் கண்ட வரப்ர சாத மூர்த்தியாகிய பொய்யாக் கணபதியார் 1 இவரது கனவில் தோன்றி அன்ப ! நீ விரும்பிய வண்ணமே முருக வேளது மயிலையும், கடப்ப மாலையையும், வடி வேலை யும், குக்குடத்தையும், ரகூைடிதரு சிற்றடியையும், பன்னிரு தோளையும், வயலூரை (செய்ப்பதியை) யும் வைத்து அப் பிரானது திருப்புகழை விருப்புடன் பாடுவாயாக ' என அருள் புரிந்து மறைந்தார். அக்னிசுரரும் இவரது கனவிற் ருேன்றி முருக வேளின் திருப்புகழைச் செப்புதற்கு வேண் டிய அதுக்ரக சத்துவத்தை (வலிமையை) யளித்தனர். இங்ங் னம் தாம் பெற்ற பெரும் பேறுகளை நினைந்து மகிழ்ந்து, அருளிற் சீர் பொ(ய்)யாத கணபதியாரிடம். வித்தக மருப்புடைய பெருமாளே ! பக்கரை விசித்ரமணி பொற் கலனை யிட்ட நடை பகூரியெனும் உக்ர துரகமும், நீபப் பக்குவ மலர்த் தொடையும், * வடிவேலும்*குக்குடமும்:-ரகூைடிதரு சிற்றடியும, முற்றிய 2பனிரு தோளும், செய்ப்பதியும், 1- நம்பியாண்டார் நம்பிக்குத் திருநாரையூர்ப் பொல்லாப் பிள்ளையார்ப் போல-அருணகிரியார்க்கு வயலூர்ப் பொய்யாக் கணபதியார். 2. பன்னிரு தோளையும் பாட விரும்பியது-(8) திருவதிகை -பதிகம் 743 - பக்கம் 26 - பார்க்க.