பக்கம்:அருமையான துணை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருமையான துணை 3 # எல்லோரும் நம்மை இப்படி அம்போன்னு விட்டுவிட்டார் களே! யாருமே பார்க்க வருவதில்லையே?’ என்று சிணுங்கியது. பெரிய வீட்டில், ஒதுங்கியிருந்த தனி அறையில்தான் புன்னவனம் தன் நேரங்களைக் கழிப்பது வழக்கம். படிப்பது, எழுதுவது, சிந்தனை செய்வது-இதற்கே அவருக்கு நேரம் போதுமான அளவு இருந்ததில்லை. தனது அமைதியை எவரும் கெடுப்பதை அவர் விரும்பியது கிடையாது. யாரிடமும் ஒட்டிப் பழகும் இயல்பு அவருடையது அல்ல. என்னைப் பார்த்து பேச வருகிறவர்கள் என்னை கெளரவிக் கிரு.ர்கள். அவரவர் அலுவலே கவனித்துக்கொண்டு விலகி யிருப்பவர்களே எனக்குச் சந்தோஷம் தருகிமூர்கள் என்று வெளிப்படையாகப் பேசும் பண்பினர் அவர். ஆயினும், அவரை கெளரவித்துப் பார்க்க வருகிறவர் களிடம் அவர்களது சந்தோஷத்துக்காக இனிமையாக உரையாடிப் பொழுதுபோக்க அவர் மறுத்துவிடுவதுமில்லை. வந்தவர்கள் போன பின்னர், இவர்கள் வராமலே இருந் திருந்தால், என் பொழுது இன்னும் பயனுள்ளதாகக் கழிந் திருக்கும்’ என்று அவரது உள்ளத்தில் எழும் எண்ணத்தை அவர் செல்லப் பிராணியைத் த ட வி. க் கொடுத்துச் சீராட்டுவதுபோல் வளர்த்து வந்தாரே தவிர, இது வேண்டாத நினைப்பு என்று மண்டையிலடித்து அமுக்கிவிட ஆசைப்பட்டதில்லை. கடுமையான நோய் கண்டதும் அவர் தனது அதைக் குள்ளேயே முடங்கிவிட நேர்ந்தது. எ து வு ம் செய்ய முடியாமல், எழுதப் படிக்க இயலாமல், விரும்பியபோது காட்சி இனிமைகளை நாடி எங்கும் போகச் சக்தி இல்லாமல், மாசக் கணக்கில் புன்னவனம் கட்டிலே கதி என்று விழுந்து விட்ட பிறகு , சூழ்நிலையும் பிறவும் சதா அலுப்பு ஏற்படுத்து வனவாக அமைந்துவிட்ட பின்னர், அவர் உள்ளம் ஏங்க லாயிற்று. கோடை கால புழுக்கத்தில் தவிக்கும் உடல் புளகிதம் உண்டாக்கக்கூடிய மென்காற்றுக்காக ஏங்குவது போல, இதம்தரக்கூடிய இனிமையை அவாவியது அவர் மனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/120&oldid=738679" இலிருந்து மீள்விக்கப்பட்டது