பக்கம்:அருமையான துணை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 1 8 அருமையான துனே

  • کمة

இல்லையோ, கண்ணே மூடிக்கிட்டுத் துரங்கு. உனக்குத் துரக்கம் வரலேன்கு, நான் கதை சொல்லுவேன். எனக்கு நெறைய கதை தெரியும். . .' "அப்படியா! ரொம்ப நல்லதாப் போச்சு!" என்று உற்சாகமாகச் சொன்னர் புன்னேவனம். அவர் உள்ளத்தில் அவர் அதுவரை அனுபவித்திராத ஒரு கிளுகிளுப்பு ஏற் பட்டது. இவ்வாறுதான் பிறந்தது அந்த விநோத நட்பு. உஷா தனது பொழுதுகளே பெரும்பாலும் அங்கேயே கழிப்பதில் உற்சாகம் கண்டாள். அவள் ஒற்றைக் குழந்தை. அண்டை அயலில் அவளோடு சேர்ந்து விளையாடுவதற்கும், அவளேச் சேர்த்துக்கொண்டு ஓடி ஆடிக் களிப்பதற்கும் சம வயதுப் பிள்ளைகள் இல்லை. பெரிய பிள்ளைகள் இது சின்னப் புள்ளே. இதுக்கு விளையாடத் தெரியாது. நம்ம ஆட்டத்துக்கு இடைஞ்சலாகத்தான் இருக்கும் என்று அவளே கூட்டிக் கொள்வதில்லே. வீட்டில் இருந்துகொண்டு அதையும் இதையும் எடுத்து, சாமான்களைக் கீழே தள்ளி ஒசைப் படுத்தியும் நாசப்படுத்தியும், அம்மாவிடம் ஓயாது தொண தொனத்தும் எரிச்சலுரட்டுவது அம்மாவுக்குப் பிடிக்காது. புள்ளையாளு வெளியே போய் விளையாடும் கண்டிருக்கேன். இது வீட்டுக்குள்ளேயே கிடந்து தொல்லை கொடுக்குதே!’ என்று அம்மா சீறுவாள். சிலசமயம் அடியும் கொடுப்பாள். இப்படியிருக்கிறதே என்று தனியாகத் தெருவில் திரிந் தால், விடுவீடாக எட்டிப் பார்த்தால் அப்பவும் ஏகப்பட்ட குறைகூறல்கள், கண்டிப்புகள், போதனைகள், இதனுல் எல்லாம் அலுப்புற்றிருந்த உஷாவுக்கு அமைதியான அந்த அறையும், கண்டிக்காமல்-குறைகூருமல்-அவள் பேச்சைக் கேட்டுக்கொண்டு சும்மா படுத்திருக்கும் தாத்தா”வும் மனசுக்குப் பிடித்துவிட்டது வியப்பில்லே. அவள் விளையாட்டுச் சாமான்கள் என்று கொண்டு வருபவை புன்னைவனத்துக்கு வேடிக்கையாகத் தோன்றும். உடைந்த கண்ணுடி, கோலிக்குண்டு, சோடாபாட்டில் மூடி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/125&oldid=738684" இலிருந்து மீள்விக்கப்பட்டது