பக்கம்:அருமையான துணை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

அருமையான துணை

அவனும் வசந்தாவுக்கு அடிக்கடி அவள் விரும்பிய துணி மணிகளை வாங்கி அன்புப் பரிசுகளாக வழங்கினான். அப்படிக் கொடுப்பதில் அவனுக்கு ஒரு இன்பம். அவற்றை வாங்கி அணிந்துகொள்வதிலும் அவன் முன் காட்சிப் படுத்துவதிலும் அவளுக்கு எவ்வளவோ சந்தோஷம். அவள் அழகு மலர்ச்சியையும் ஆனந்தத் துள்ளலையும் கண்டு ரசிப்பதில் ராஜா கிருஷ்ணனுக்குத் தனி மன நிறைவு.

வசந்தா தன்னுடையவளாகத் தன் வீட்டுக்கே வந்து விடுவாள்; இவ்வளவு உரிமையோடு பழக அனுமதித்திருக்கும் பெற்ரறோர்கள் தங்கள் அருமை மகளின் விருப்பத்துக்குக் குறுக்கே நிற்கமாட்டார்கள் என்றே அவன் நம்பினான்.

காலம் அவன் நம்பிக்கையைச் சிதறடித்தது.

பணம் மிகுந்த, வசதிகள் நிறைந்த, காரும் பெரிய வீடும் தொழில் நிறுவனமும் உடைய பெரியதனக்காரர் ஒருவரின் மகனை தங்கள் மகளுக்குத் தகுந்த மணுளளுகத் தேர்ந்தெடுத் தார்கள் வசந்தாவின் பெற்றோர்கள்.

அந்த ஏற்பாட்டில் மனம் ஈடுபடாதவளாய்க் காட்டிக் கொண்டாள் வசந்தா, ராஜாகிருஷ்ணன் பற்றி அவள் அம்மாவிடம் சொல்லவும் செய்தாள். ஆனால் அனுபவம் மிகுந்த அம்மாவின் அன்பு உபதேசம் அவள் ஆசையைத் திசைதிருப்பிவிட்டது. வசதியான பங்களா; உல்லாச வாழ்வுக்கு ஏற்ற கார், பணம், இஷ்டம்போல் கிடைக்கக் கூடிய நகைகள் ஸாரிகள் வகையறா: நாகரிக ஓட்டல்களின் நவ நவமான தீனிவகைகள்-புதிய சொர்க்க வாழ்வு அவன் கனவில் குளு குளுவென ஒளி வீசியது.

அப்புறமும் அவள் சிணுங்கவில்லை; சீறவில்லை. சிரித்துக் கொண்டே புதுமனை புகுந்தாள்.

ஏமாற்றம் அடைந்த ராஜாகிருஷ்ணன்தான் சீறினான்; தன்னுள் சிடுசிடுத்தான்; "ஸினிக்" ஆனான்.

"பெரும்பாலும் பெண்கள் துணைவன் என் ஒருவனை நாடுவதும் தேடுவதும் தங்களுடைய எதிர்காலம் ஸ்திரமான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/15&oldid=966524" இலிருந்து மீள்விக்கப்பட்டது