பக்கம்:அருமையான துணை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நஷ்டமே லாபம்

7


தாக அமையவேண்டும் என்பதற்காகவே, சாப்பாட்டுக்கு மயக்கம் இல்லாமல், இஷ்டம்போல் உண்டு, உடுத்து, உல்லாசமாகத் திரிவதற்கு அவர்கள் நோக்கில் நல்ல கணவன்... என்றெல்லாம் அவன் மனம் ஞானமொழி பேசலாயிற்று.

என்றாலும், வசந்த போய்விட்டது தனக்கு பெரும் நஷ்டம் என்று அவன் உள்ளம் வருத்தப்படாமல் இல்லை. அப்போதெல்லாம் மனசார அவளை வசைபாடுவதும் அவன் இயல்பாகிவிட்டது.

அதன் பிறகும் அவ்வட்டாரத்தில் இருப்பது அவனுக்கு உசிதமாகப்படவில்லை. எனவே ராஜாகிருஷ்ணன் வேறொரு இடத்துக்குக் குடிபெயர்ந்தான்.

ஐந்து வருடங்கள் தம் போக்கில் ஓடிவிட்டன. தான் உண்டு, தனது புத்தகங்கள் உண்டு என்று காலம் ஓட்டி வந்தான் அவன். வசந்தாவை அவன் மறுபடி பார்க்கவே இல்லை, பார்க்கவேண்டும் என்று ஆசைப்படவும் இல்லை.

அதற்காகக் காலம் சும்மா இருந்துவிடுமா? ஒருநாள் அவர்களை மீண்டும் சந்திக்க வைத்தது.

ஒரு சினிமா தியேட்டரின் அருகே அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.

அவன் ஏதோ நினைவாக நடந்துகொண்டிருந்தபோது, "என்னாங்க? ஹல்லோ ராஜாகிருஷ்ணன்!" என்ற குரல் அவனைப் பிடித்து உலுக்கி நிறுத்தியது.

அப்படி அழைத்தது யார்? ஒரு இளம் பெண். தடியாக, ரொம்பவும் தடியாக, கழுத்து-உடம்பு எல்லாம் ஒன்றாகி, குதிர் மாதிரிப் பெருத்திருந்த உருவம். . .

"யார் இந்த எருமைமாடு? எங்கோ பார்த்த ஞாபகமாய். . . .

கால் பந்து மாதிரி உருண்டு திரண்டிருந்த தலையில் உப்பியிருந்த கன்னங்கள் மத்தியில் இருந்த முக்கும், அதை ஒட்டியிருந்த கண்களும்... -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/16&oldid=966570" இலிருந்து மீள்விக்கப்பட்டது