பக்கம்:அருமையான துணை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

அருமையான துணை

இவ்வாறான தனது எண்ணங்களை சொக்கலிங்கம் நண்பர் கனிடமும் மற்றவர்களிடமும் சொல்லத் தொடங்கினான். ஆகவே எல்லோரும் அவனை ‘உருப்படாத பயல்!' ‘திமிர் பிடித்தவன்', ‘அகம்பாவி' என்றெல்லாம் பழிக்கலானார்கள்.

அவன் தாய் செத்ததும், சொக்கையா கண்டிப்பாக நடந்து கொண்டான். ‘பல விசேஷங்களில் சம்பிரதாயமாகச் செய்யப்படுகிற சடங்குகளில் பெரும்பாலானவை அர்த்தமற்றவை; அநாவசியமானவை. முக்கியமாகச் சாவு வீட்டிலே, செத்த அன்றும், பிறகு மறுநாளும் செய்யப்படுகிற காரியங்களில் அநேகம் துட்டுப் பிடுங்கவும், பொருள்களை வீணடிக்கவும் ஏற்பட்ட கிரியைகள் என்றே தோணுது. அதனாலே அவை தேவையில்லை. அவசியமானவற்றை செய்தால் போதும்' என்று கூறி, பிடிவாதம் காட்டினான்.

பிணத்தை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்வதற்கு ஊராரில் சிலபேர் வந்தார்கள். மறுநாள் அவர்களும் வரவில்லை. முக்கியமானவர்கள் ஆறேழு பேர் மட்டுமே தலையைக் காட்டினர். அவர்களை வைத்தே காரியத்தை முடித்தான்.

‘செத்த பிணம் சுடுகாடு போய்ச் சேரவேண்டும். அதுக்கு முதல் நாள் நிகழ்ச்சிகள் தேவை. அப்புறம், எரிக்கும் இடம் பிறருக்கு உதவும் வகையில் அந்த இடத்தை சீராக்க வேண்டும். அதற்காக சாம்பல் கரைத்தல் விசேஷம் தேவைதான். அதை ஒட்டி பாலை ஊற்று, எண்ணையைக் கொட்டு: தயிரை ஊற்று, இளநீரால் குளிப்பாட்டு, தேனைக் கொட்டு,என்ரெல்லாம் வீணான வேலைகள் செய்கிறார்கள். அது அநாவசியம், காகக்குப் பிடித்த கேடு' என்று சொக்கையா லெக்சர் படித்தான்.

தவிர்க்க முடியாமல் வந்திருந்த சிலரும் ‘எல்லாரும் சொல்வது சரிதான். இவன் எங்கே உருப்படப் போறான்!' என்று கூறிவிட்டுப் போனார்கள்.

‘பதினாறாம் நாள்' விசேஷம் என்று சொல்லி, நிலைமைக்கும் காலத்துக்கும் ஏற்றபடி பன்னிரெண்டாம் நாளிலும், பத்தாவது அல்லது ஏழாவது அல்லது ஆறாவது நாளில்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/37&oldid=970613" இலிருந்து மீள்விக்கப்பட்டது