பக்கம்:அருமையான துணை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணைந்த பெருமாளின் மனமகிழ்ச்சி

85

ஆனாலும் அவனிடமும் ஒரு தனி நோக்கு உண்டு. அவன் திருவாயைத் திறந்துவிட்டாலே அது தானாகப் புரிந்து விடும்.

அணைந்த பெருமாள் ஏதோ முக்கிய அலுவல் மீது போகிறவன்போல வேகமாய் நடந்துகொண்டிருந்தான். ஒரு வீட்டின் வாசலில் சும்மா நின்ற தாறும்பூநாத பிள்ளை “என்னய்யா, ரொம்ப அவசரயோ?” என்று கேட்டு அவனுக்கு திடீர் பிரேக் போட்டார்.

நாறும்பூநாதர் என்பதும் ஒரு ‘சாமி பெயர்’ தான். அத்தப் பக்கத்து ஊர்களில் தமிழ் மணம் கமழும் அருமையான பெயர்களே சாமிகளுக்குச் சூட்டி, அவற்றையே தங்கள் குழந்தைகளுக்கும் இட்டு மகிழ்கிற வழக்கம் நிலைபெற்றிருந்தது. அதனுல் தனி ரகமான பெயர்களை உடைய நபர்கள் அந்த வட்டாரத்தில் காணப்பட்டனர்.

“அவசரம் என்ன அவசரம்! வெயிலுகந்த நாத பிள்ளையை பார்க்கப் போயிருந்தேன். அவாள் வீட்டில் இல்லை. . . . . .” என்று சொன்னான், நின்றaன்.

“அவர் மகளுக்குக் கல்யாணம்னு பேச்சு வந்துதே என்ன ஆச்சு? ஒரு ஏற்பாடும் நடக்கிறதாத் தெரியவியே!” என்றார் நாறும்பூ .

“பண விஷயத்திலே தகராறு இருக்கும்போல் தோணுது. இவரு ஐயாயிரம் ரூபாய் நகையும், ரெண்டாயிரம் ரொக்கமும் கொடுக்கத் தயார்தான். மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மூவாயிரம் ரொக்கம் கேட்டாங்க, கல்யாணமும் பண்ணிவிடணும்னு சொன்னுங்க. ஆகவே அந்த இடம் முடிவாகலே.”

‘ஏதோ கட்டையோ, நெட்டையோ பார்த்துச் செய்து விட வேண்டியதுதான். பெண்ணுக்கும் வயசு ஏறிக்கிட்டுப் போகுதில்லே’ என்று அக்கறையோடும், பரிவோடும் பேசுகிற வர்போல் ‘நாவன்னா’ சொல்லி வைத்தார்.

அணஞ்ச பெருமாள் அவர் அருகில் நெருங்கி நின்று, அப்படியும் இப்படியும் தலையைத் திருப்பிப் பார்த்துவிட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/44&oldid=1322904" இலிருந்து மீள்விக்கப்பட்டது