பக்கம்:அருமையான துணை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரியாத விஷயம் ‘5 ஏய்' என்று பதறிப்போய் அலறிஞர் சிவானந்தம். பிடிடா, பிடிடா... அடே அடே! என்று தொடர்ந்து அவர் வீட்டினுள் புகுந்து யாரோ எதையோ கொள்ளை படிப்பதைக் கண்டுவிட்டுப் பதறியவர்போல் சிவானந்தம் கத்திய கதறல் வீட்டில் இருந்தவர்களையும், தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த முத்துசாமியையும் சுண்டி இழுத்தது. கையிலிருந்த வேலைகளே அப்படி அப்படியே போட்டுவிட்டு, சத்தம் எழுந்த இடம்தோக்கி அரக்கப் பறக்க ஒடி பந்தார்கள் அவர்கள். சிவானந்தம் அவரது அறைக்குள், தோட்டத்தைப் பார்த்து அமைந்திருந்த சன் ைல் அருகில் நின்றுதான் அப்படிக் கத்திக்கொண்டிருந்தார். வேறு என்ன செய்வது என்று விளங்காதவராய் அவர் கூச்சல் கிளப்பி நிற்பதாகத் தோன்றியது. விரைந்து வந்தவர்கள் தோட்டத்து சன்னல் பக்கம் தான் வந்தார்கள். என்ன, என்ன விஷயம்?’ என்று கேட்டார்கள். அங்கே மாடோ, மனிதரோ நின்று நாசவேலை செய்ததாகவும் அவர்களுக்குப் படவில்லை. "அதோ பாரு'... அந்தக் குரங்கு செடிகளை பாழாக்குது. இலைகளை பிச்சுப் பிச்சுப் போடுதே, ஏய் ஏய், விடாதே! பிடிடா என்று பெரியவர் உணர்ச்சி மிகுதியோடு மீண்டும் அலறிஞர். . மெய்யாகவே குரங்குதான் போலும் என்று கண்களே ஏவினர் பலரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/61&oldid=738746" இலிருந்து மீள்விக்கப்பட்டது