பக்கம்:அருமையான துணை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புரியாத விஷயம் 蔷露 சிவானந்தம் சுட்டிய இடத்தில் ஒரு சிறு பெண்தான் நின்றது; தோட்டவேலை செய்யும் முத்துசாமியின் மகள் செல்லம். அந்த ஆறு வயசுக் குரங்கு'தான் சும்மா ஒரு செடியின் இலைகளை கிள்ளிப் போட்டிருந்தது. அதுக்கு ஒரு விளையாட்டு: செடியில் பூக்கள் இல்லை. பூக்களை வெளிச்சமிடாத, சில சில வர்ண விஸ்தார இலைகளைக்கொண்ட, அழகுச் செடிகளே அந்தப் பகுதியில் நின்றன. பூக்கள் வசீகரமாகச் சிரித்துக் குலுங்கினல், அச்சிறுமி அவற்றை கொய்திருக்கும்: அப்போதும் அதன் விரல்கள் ஒரு செடியைப் பிடித்து இழுத்தபடிதான் இருந்தன. பெரியவர் சத்தம் போட்டதும், திமு திமு என்று ஆட்கள் வந்ததும், தனது விளையாட்டால் வந்த வினைகளே என்பதை உணராமலே அது நின்றது. வீட்டுப் பெரியவர் கூப்பாடு போடுவதும், மற்றவர்கள் பரபரப்பாக வந்து நிற்பதும் அக்குழந்தைக்கு ஒரு வேடிக்கை யாகத்தான் தோன்றியது. ஆகவே அது சிரித்தது. 'பாருடா; எவ்வளவு திமிரு செடிகளைப் பாழ்படுத்துததும் இல்லாமே, பல்லே வேறே காட்டுதே. கொழுப்புப் புடிச்ச கழுதை' என்று சிவானந்தம் உறுமினுர். - - அவருக்குத் தெரியும் அச் செடிகளின் உயர்வும் அருமை யும் தோட்டத்தில் உள்ள ஒவ்வொரு செடியும் அவருக்குக் குழந்தை மாதிரி. வீட்டுத் தோட்டத்தைக் கலை உனர். வோடும் ரசனை ஈடுபாட்டுடனும் கண்ணும் கருத்துமாகப் போற்றிப் பாதுகாக்கும் பண்பாளர் அவர். செடி கொடி களின் மதிப்பை அறியாத சின்னச் சவம் குரங்குத்தனம் பண்ணுவது என்ருல்? அவர் உடல் பதறியது. உணர்வுகள் கொதிப்புற்றன. மீண்டும் கத்தினுர். என்னடா பாத்துக்கிட்டே நிக்கிறே?. முத்துசாமி முன் வந்தான். ஏ செல்லா, உனக்கு தோட்டத்திலே என்னட்டீ வேலை? செடி கிட்டே ஏன் சேட்டை பண்ணுதே? ஏன் இலைகளை இப்படிப் பிச்சுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/62&oldid=738747" இலிருந்து மீள்விக்கப்பட்டது