பக்கம்:அருமையான துணை.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவள் சொர்க்கம் ?器 எல்லாருக்கும் எல்லாம் தெரியும்: எல்லாம் முதல் முதலாக அங்கு வந்து, அனுபவிக்கப்பட்டுவிட்டன என்றுதான் கருத வேண்டியிருக்கும். மற்றவர்கள் நம்புகிருர்களா, நம்புவார் களா என்று எண்ணுமலே செல்லம்மா தனக்குத் தோன்று வதையெல்லாம் தயங்காது சொல்லிச் சொல்லிப் பழகி விட்டாள். தான் சொல்வதை அவள் நம்பவும் செய் தாள். இந்த ஊர் பண்ணையார் தோட்டித்தில் தக்காளி பயிர் செய்திருக்கிருங்க. ஒவ்வொரு பழம் எவ்வளவு பெரிசாக இருக்கு ெ தரியுமா?’ என்று கைலாசம் அவளிடம் சொன்னன். இதிலே ஆச்சர்யப்படறதுக்கு என்ன இருக்கு தான் எங்க ஊரிலே வீட்டோடு இருக்கையிலே தோட்டத்திலே தக்காளி நட்டு வளர்த்தேன். ஒவ்வொரு செடியிலும் ஏகப் பட்ட காபி காய்ச்சுது. ஒவ்வொரு காயும் ஒரு சொம்பு தண்டி இருந்துதே...' என்ருள் அவள். அவன் சின்னப் பெண்ணுக வீட்டோடு இருந்த காலத்தில் அந்த வட்டாரத்திலே ஒரு இடத்தில் கூட தக்காளிப் பயிர் எட்டிப் பார்த்ததில்லை; அவள் ஊரில் அது வளர்ந்திருக்கவே முடியாது என்று கைலாசத்துக்கு நிச்சயமாக மனசில் பட்டது, ஆயினும் அவன் அவளை மறுத்துப் பேசவில்லை. நீ ஏன் இப்படிப் பொய் சொல்கிறே? என்று அவளிடம் கேட்கத் துணியவில்லே அவன். எழுபதுக்கும் எண்பதுக்கும் இடைப் பட்ட ஏதோ ஒரு வயசை எட்டிப் பிடித்து வாழ்க்கைப் பாதையில் தன்னந் தனியாக நடத்து காலத்தைச் சுமை யாகக் கொண்டு தள்ளாடிச் செல்கிற அந்தப் பெரிய பினும் வியை ஒரு பொய் சொல்வி’ என்று மதிப்பிடுவதற்கு அவன் மனம் இடம் தரவேயில்லை. செல்லம்மா வெவ்வேறு சமயங்களிலும், வெவ்வேறு நபர்களிடமும் சொல்லி வந்த-ஒயாது சொல்லிக்கொண் டிருந்த-நல்லூர் பெருமைகளைக் ைக வாச ம் கேட்டு வந்திருந்ததனுல் அவனுள்ளத்தில் அவனே அறியாமலே நல்லூர் மீது ஒரு பற்றுதல் ஏற்பட்டுவிட்டது. ஆச்சி சொல்கிற அளவுக்கு இல்லாதுபோனலும், ஒரளவுக்கேனும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருமையான_துணை.pdf/84&oldid=738771" இலிருந்து மீள்விக்கப்பட்டது