பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/122



'இன்று உங்கள் மத்தியில் இருக்கவும் உங்கள் சங்கத்தின் கருத்துக்களையும், நோக்கங்களையும், வேலைமுறைகளையும் உணரவும் வாய்ப்புக் கிடைத்ததற்கு நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.

இப்பொழுது பாடப்பட்ட பாட்டுகளும் அவற்றிற்கு நடித்த நடிப்புகளும் எனக்கு மிகுதியும் மகிழ்ச்சியும் திருப்தியும் அளித்தன. இவை எனது நோக்கத்துக்கும் எதிர்பார்த்திருப்பவற்றிற்கும் பொருத்தமானதாக இருக்கின்றன. நீங்கள் செய்திருக்கும் இந்தமாதிரி ஏற்பாடு உண்மைத் தமிழர்களால் மிகவும் வரவேற்கப்பட வேண்டியதுமாகும். பாட்டுகளும் நடிப்புகளும் கடவுள்களையும் கலவித்துறையையும் பற்றிஇருப்பது காட்டுமிராண்டிக் காலத்தைக் குறிப்பதேயாகும். இன்றைய காலத்தையும் அவை குறிக்கும்’ என்று சொல்லப்படுமானால், அது பிறர் உழைப்பில் வாழும் வஞ்சகக் கூட்டமான பார்ப்பனர் (பூதேவர்) களுக்கும், பாமர மக்களைச் சுரண்டிப் போக போக்கியமனுபவிக்கும் கொள்ளைக் கூட்டமான (லட்சுமிபுத்திரர்களான) செல்வவான்களுக்கும் மாத்திரமே சொந்தமானதாகும்.

பார்ப்பனியக் கொடுமையும்,பணக்காரத் திமிர்த்தொல்லையும் ஒழிக்கப்படவேண்டும் என்று கருதுபவர்கள் கடவுள்களையும் கலவியையுமே உள்விஷயமாகக் கொண்டகதை, காவியம், கலை, சங்கீதம், நாட்டியம், இலக்கணஇலக்கியம் முதலியவற்றைக் கண்டிப்பாய் ஒழிக்க வேண்டும்.

நம்முடைய இந்த இரண்டு வேலைக்கும் மேற்கண்ட இரண்டுகூட்டமும் தடையாகவே இருக்கும் என்பதோடு, நமக்குள் புகுந்துகொண்டே நம்முயற்சி வெற்றிபெறாமல் போகச் சூழ்ச்சி செய்வார்கள்.

இதை நான் 26-11-28 இல் சென்னையில் V. P. ஆலில் என் தலைமையில் கூட்டப்பட்ட சீர்திருத்த மகாநாட்டுத் தலைமைச் சொற்பொழிவில் தெளிவாய்ச் சொல்லி இருக்கிறேன்.