பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

175/இழந்த செல்வம்



ஆனால் இவர் ஆதரவற்ற நிலையில் இருக்கிறார், இது அவர் தாமே தேடிக் கொண்டதுதான்! அவர் ஓர் இயக்கத்தைச் சார்ந்தவர். இயக்கமோ சிதறுண்டு கிடக்கின்றது. உட்பூசலும் ஆளுக்கு ஒரு குழுவுமாக இயங்குகிறது அது. கவிஞரும் அணைந்தும் செல்ல மாட்டார்; அனைத்தும் செல்லமாட்டார், இந்தக் குறைகள் எல்லாம் கவிஞரைத் தனிமைப்படுத்திவிட்டன. தலைமைக் குழுவை எவ்வாறு அமைப்பது என்பது பற்றி பேச்சு வந்தது. நான் விளக்கங்கள் கேட்டேன். என் கருத்துக்களை வெளியிட்டேன். கருத்து வேறுபாடுகள் எழுந்தன. திராவிட இயக்கத்தின் பெருந்தலைவர்களை ஈடுபடுத்தி விழாவினைச் சிறப்புற நடத்தவேண்டும் என நான் எண்ணினேன். நாவலர் நெடுஞ்செழியன், சி.பி. சிற்றரசு, கி.வீரமணி முதலான சிலபெயர்களைக் குறிப்பிட்டு அவர்களை விழாக்குழுவில் சேர்த்துக் கொள்ளலாமா என்று கவிஞரிடம் கேட்டேன். உண்மையில் அவர்களுக்கும் கவிஞருக்கும் இடையில் அமைந்திருந்த உறவு எனக்கு முழுமையாகத் தெரியாது வெளித் தோற்றம் போன்று உள்ளுறவு இருக்கவில்லை. என்விருப்பமும் இவர்களை ஒன்றாகக் காண்பதுதான். ஆனால் கவிஞர் இவர்களை எல்லாம் எதிர்த்தார். ஆனால் யாரை வைத்து விழாவை நடத்துவது? செயல் வீரர்கள் யார்? நம் உண்மை நண்பர்கள் யார்? கவிஞர் தந்த பட்டியல் எனக்கு ஏமாற்றம் தந்தது. என் ஊக்கத்தையும் குறைத்தது. அவர் நம்பியிருந்தோர் ஓய்ந்தோர், தொண்டரற்றோர், மாற்றணியினர்... எஸ்.இராமநாதன். மணவாளராமானுசம், வி.பி.ராமன் அகிலன், நாரணதுரைக்கண்ணர், ஈ. வி.கே.சம்பத்து இவர்களை எவ்வாறு அணுகுவது என்பதே என்மலைப்பு. கவிஞரிடம் என் ஏமாற்றத்தையோ மலைப்பையோ நான் காட்டிக்கொள்ளவில்லை. கவிஞர் குறிபிட்டவர்களுடன் இணைந்து பணியாற்ற உடன்பட்டேன்.

என் உள்ளத்தில் வேறொரு தயக்கமும் இருந்தது. 1964