பக்கம்:அரும்புகள் மொட்டுகள் மலர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரும்புகள் மொட்டுகள் மலர்கள்/40



துவ நோக்கமும் சீர்திருத்த உள்ளமும் பெற்றிருந்ததே ஆகும்.

அப்பொழுது திரு. பாரதியாரவர்கள், எளிய நடையி லேயே தம்பாடலைஎழுதிவந்தார். இது புலவர்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், பாரதியார் பாடலைக் குறை கூறத் தொடங்கினர். ஏனெனில் பாட்டு என்பது, கற்றவர்களால் அரிதாகப் பொருளுணரக்கூடிய திரிசொற் களைக் கொண்டுதான் எழுதவேண்டும் என்பது விதியாக இருந்தது. காலம், அந்த விதியை மாற்றிவிட்டதால், அந்த மாறுதலைப் பின்பற்றி எழுதலானார் பாரதியார். அதற்குமுன் நாட்டைப்பற்றிய கவலையில்லாமல், மக்கள் நலனைப்பற்றிய கவலையில்லாமல் வாழ்ந்து வந்தனர் புலவர்கள். அவர்கள் கவலையெல்லாம் பொழுது விடிந்தால் பொழுது போனால், ஆண்டவனைப் பற்றியும், அவனருள் பெறுவது பற்றியுமே இருந்து வந்தது. அதற்காக அவர்கள் தமது புலமையை ஆண்டவனைப் பாடுவதிலும், தலபுராணம், அந்தாதி, கோவை போன்ற நூல்கள் எழுதுவதிலுமே செலவிட்டு வந்தார்கள். ஆனால் தேசிய இயக்கம் ஏற்பட்ட பிறகு, தலைவர்களாயுள்ளவர்கள், தங்கள் கருத்தை மக்களிடம் பரப்பவேண்டிய அவசியத்துக்கு ஆளானர்கள். அதனால் பாரதியாரும் தாம் எழுதுகிற பாட்டின் பொருளைப் பிறர் உதவியின்றிச் சாதாரண மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற நோக்கோடு, எளிய நடையில் எழுதலானர். இதற்காகத்தான் எதிர்ப்புக் கிளம்பியது. இதில் பாரதியாருக்கு ஆதரவாக இருந்தார் திரு. பாரதிதாசனவர்கள்.

ஒருசமயம் திரு.பாரதியாரவர்கள் தம்மைச் சூழ்ந்திருந் தவர்களிடம், 'சுப்புரத்தினமும் பாட்டு எழுதுவான்' என்று சொல்லி, 'எழுது' என்று கட்டளையிட்டவுடன், 'எங்கெங்குக் காணினும் சக்தியடா’ என்ற பாடலைப் பாரதிதாசன் எழுதியதாகச் சொல்வர். இதுதான்,