பக்கம்:அருளாளர்கள்.pdf/122

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 11

பெருமக்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள், அவர்கள் இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டதாலே இது தூய்மை அடைந்து விட்டது என்று பேசுகிறார். இதற்கு ஓர் உவமை காட்டிப் பேசுகிறார். யாகம், யக்ஞம் செய்கின்ற இடத்திலே புலாலைத்தான் நெருப்பிலே போடுகிறார்கள்; புலால் கெட்டதாக இருக்கலாம்; ஆனால் அது அக்னி குண்டத்தில் வீழ்ந்துவிட்ட பிறகு தூய்மை அடைந்து, தேவர்களுக்கு உணவாகி விடுவதுபோல, என்னுடைய பாட்டு இந்தப் புலவர்கள் காதில் பட்டதால், தூய்மை அடைந்து விட்டதென்று சமத்காரமாகச் சொல்கிறார். “கவைக்கொ ழுந்தழ னாச்சுவை கண்டவூன்" - நெருப்பினுடைய சுவையைப் பார்த்துவிட்ட ஊன்; “இமையோச் சுவைக்க வின்னமிழ் தாயின"-தேவர்கள் கூட விரும்பி உண்ணக்கூடிய உணவாக ஆகிவிட்டது போல; "துளக்கமில் சான்றோர் அவைக்க ளம்புகுந்து"- கொஞ்சங்கூட மனக் கலக்கமில்லாத சான்றோர்கள் நிறைந்த சபையிலே புகுந்ததால், “இனியவாய்ட்என்னுடைய பாடல்கள் இனியவை ஆகிவிட்டன; “...ஆலவா யுடையார் செவிக்க ளம்புகுந் தேறுவ சிறியனேன் பனுவல்’ - “சிறியவனாகிய என்னுடைய பனுவல்கூட இந்தப் புலவர்களுடைய திருச்செவியில் கேட்டதாலே இப்போது சோமசுந்தரப் பெருமான் செவிக்கும் அது பொருத்தமுடையதாகிவிட்டது” என்று பேசுவது மிக அழகாக இருக்கிறது. .

அடுத்தபடியாக நாட்டு வளம் பேசுவார். எல்லா நூல்களுக்கும் அது இயல்புதான். அந்த இடங்களில் வழக்கமாகப் பேசப்படுகிற வளத்தைக் குறித்து இந்தப் புலவன் ஏதாவது புதுமையாகப் பேசியிருக்கிறானா என்று நாம் பார்ப்பது அவனுடைய தனிச்சிறப்பிற்குக் காரணமாக இருக்கிறது வேளாளர்களைப் பற்றிப்