பக்கம்:அருளாளர்கள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 * அருளாளர்கள்



தடாதகைப் பிராட்டியார் திருவவதாரத்தைப் பேச வருகிறார்.

“மாந்தர்பயின் மூவறுசொன் மாநில வரைப்பில்

தீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப”

(திருவிளை 4.14)

இது மரபு பற்றிச் சொல்லப்படுகிறது. 18 மொழிகள் இந்த நாட்டிலே என்று சொன்னார்கள். “மாந்தர்பயில் மூவறுசொன்’-மக்கள் பேசுகின்ற அந்தப் பதினெட்டு மொழிகளிலே “தீந்தமிழ் வழங்குதிரு நாடது சிறப்ப’_______தீந்தமிழ் வழங்குகின்ற இந்த நாடு சிறக்கும்படியாக இங்கே வந்து தோன்றினாளாம். ஏன் தடாதகைப் பிராட்டியார் வடக்கே தோன்றக் கூடாதா? தமிழ் சிறப்பதற்காக இங்கே வந்து தோன்றினாள் என்று சொல்கிறார். இந்தக் கருத்தும் சேக்கிழார் பெருமானிடத்திலிருந்து இவர் எடுத்ததுதான். திருஞானசம்பந்தர் திரு அவதாரம் செய்தார் என்று சொல்ல வருகிற சேக்கிழார்,

திசைஅனைத்தின் பெருமைஎலாம் தென்திசையே

             - வென்றுஏற,

மிசை உலகும் பிறஉலகும் மேதினியே தனிவெல்ல, அசைவுஇல்செழும் தமிழ்வழக்கே அயல்வழக்கின்

             துறைவெல்ல,
இசைமுழுதும் மெய்அறிவும் இடம்கொள்ளும்
             நிலைபெருக".
             (பெயு-927)

சொர்க்கம், மத்திய பாவரம் என்று சொல்லுகிறோமே, அந்தத் தேவர்கள் வாழ்கின்ற சொர்க்கலோகமும், மற்ற உலகங்களையும் இந்த பூ உலகம் வென்று விட்டதாம்; “அசைவு இல் செழும் தமிழ்வழக்கே அயல் வழக்கின் துறைவெல்ல’’ உலகத்திலுள்ள எல்லா வழக்குகளையும்.