பக்கம்:அருளாளர்கள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


122 அருளாளர்கள்

திருக்குறளைப் பொறுத்த மட்டில், எந்தத் தமிழ்ப் புலவனும் அதை எடுத்து ஆளாமல் இருக்க முடியாது. அதை பரஞ்சோதியாரும் ஆள்கிறார். ஆனால் திருக்குறள் வந்த காலத்திற்குப் பின்னால், ஒருபுலவன் எவ்வளவு காலம் கழித்து வருகிறானோ, அதற்கு ஏற்றபடி மெருகு ஊட்டப் பார்ப்பான். வள்ளுவன் பேசுவான்,

“செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான் நல்விருந்து வானத் தவர்க்கு” -

(குறள் : 86)

வந்த விருந்தினர்களை உபசரித்து அனுப்பிய பிறகு, ‘அப்பாடா என்று நினைப்பதில்லையாம்; “வரு விருந்து’ பாத்திருப்பானாம். இனி வரப்போகிறார்கள் என்று பார்த்திருப்பான். அவன் தேவர்களுக்கு உயர்ந்த விருந்தாக ஆவான் என்று சொன்னார் வள்ளுவர். இதிலே ஒரு குறை காண முடியும். செல்விருந்து ஓம்பினான்’ என்று சொல்வதில், போனவர்களை நன்றாக உபசரித்து அனுப்பினான் என்று பொருளாயிற்று. வருவிருந்து பார்த்திருப்பான்’ என்றால் இரண்டு விதமாக இருக்கலாம் அல்லவா! எங்கே வந்துவிடப் போகிறார்களோ என்று பார்ப்பதும், எப்பொழுது வருவார்கள் என்று பார்ப்பதும் ஆக இரண்டு வகை உண்டு. ஆகவே இதிலுள்ள இந்தச் சிறு குறையை இந்தப் புலவன் நினைத்துப் பார்க்கிறான். அதற்கு விளக்கம் சொல்கிறான்.

“அருந்தின ரருந்திச்செல்ல வருந்துகின் றாருமாங்கே

இருந்தினி தருந்தா நிற்க வின்னமு தட்டுப் பின்னும் விருந்தினர் வரவு நோக்கி வித்தெல்லாம் வயலில்வீசி வருந்திவிண் ணோக்கு மோரே ருழவர்போல்’’ “அருந்தின ரருந்திச் செல்ல’’- சாப்பிட்டவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போக; “வருந்துகின் றாருமாங்கே