பக்கம்:அருளாளர்கள்.pdf/146

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


திருவிளையாடலும், பரஞ்சோதியாரும் 135

இசைத்தல் என்பவை குற்றங்கள். வெள்ளை இசை என்பது அழுத்தமில்லாமல் பாடுவது பேய்க் குரல் - அதைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை; கட்டைக் குரல் -இதைப் பற்றியும் சொல்லத் தேவையில்லை; வெடிக் குரல், மூக்கினால் இசைத்தல் இவையெல்லாம் கூடாது. சுருதியிலிருந்து வேறாக ஒலித்தல், பெரு மூச்சு எறிந்து துள்ளல் முதலாயின பாடும் தொழிலில் உள்ள குற்றங்கள். சுருதியின் வேறாக ஒலித்தல் நமக்கு நன்றாகத் தெரியும். பெருமூச்சு எறிந்துதுள்ளல் - உயிர் போகிற மாதிரி பெருமூச்சு வாங்கிக்கொண்டு பாடுகிறார்களே அது கூடாது; “எறிந்து நின்று இரட்டல்’ - இதைச் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

“எறிந்து நின்று இரட்டல்’ என்பது ஒரு பண்ணிலே மற்றொரு பண் வந்து கலப்பது. ஒரு ராகம் பாடிக் கொண்டிருக்கும்போது, அதில் பல ராகங்களின் சாயல்கள் வருவதைப் பார்க்கிறோம். அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. அதைச் சொல்கிறார். ஒரு ராகத்தில் வேறொரு ராகத்தின் சாயல் வருவது தவறு என்று சொல்கிறார். அதற்கு மேலே பாடும் போது, மந்தர மத்திம தார ஸ்தாயிகளில் - துரங்கல், துள்ளல் என்ற கால வேறுபாட்டுடன் பாட வேண்டுமாம். அதைவிட முக்கியமானது மருந்து விழுங்குவது போன்று சொற்களை விழுங்கிவிடாமல் இருக்க வேண்டும், இசைப் புலவன். இன்றைக்குப் பாடலை மென்று முழுங்குகிறவர்கள் சிலர்; முழுவதுமாக விழுங்குகிறவர்கள் சிலர்; குதறித் துப்புகிறவர்கள் பலர். இந்த நிலையில் இருக்கின்ற நாம் இதைக் கவனிக்க வேண்டும். மருந்து போன்று பாடலின் சொற்களை விழுங்கி விடாமல் பாட வேண்டுமென்று சொல்வதைப் பார்த்தால் சொற்களைப் பொருள் தெரியுமாறு உச்சரிக்க வேண்டும் என்பது தெரிகிறது.