உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருளாளர்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136 * அருளாளர்கள்



இனி மிகுதியும் உயர்ந்த பொருள், மிகுதியும் இழிந்த பொருள் இரண்டையும் வைத்து ஒரு திருவிளையாடல் பேசுகிறார். அது மண் சுமந்த படலம். மாணிக்கவாசகப் பெருமானுக்காக வையை பெருக்கு எடுத்துவிட்டது. பாண்டியன் ஆணையிட்டு விட்டான், அவரவர்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டு, எல்லை வகுத்து, அந்தந்த எல்லையை அடைக்க வேண்டுமென்று. அவரவர்கள் தங்கள் எல்லையை அடைப்பதற்காக ஆள் மூலமாகவோ, நேரடியாகவோ சென்று அடைக்கிறார்கள். இந்த நிலைமையிலே அங்கயற்கண்ணி அரசாட்சி செய்கிற ஊரிலேயும் இப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் போல் இருக்கிறது. ஒர் அம்மை இருக்கிறார். அவள் வேறு எந்தவிதமான துணையும் இல்லாமல் ஒண்டியாக இருக்கிறாள். ஆனால் பிறரை நம்பி, கையேந்திப் பிழைப்பவளல்லள். உழைத்துப் பிழைப்பவள்.

வந்தி என்ற பெயருடையாள். அவரவர்கள் பங்கை அடைக்க வேண்டுமென்று தண்டோரா போட்டார்கள். அப்போது இவள் சொக்கநாதப் பெருமானை நோக்கி முறையிடுகிறாள்.

“பிட்டுவிற் றுண்டு வாழும் பேதையேன் இடும்பை

                    யென்ப
தெட்டுணை யேனு மின்றி யிரவியெங் கெழுகென்
                 றின்னாண்

மட்டுநின் னருளா லிங்கு கைகினேற் கின்று வந்து விட்டதோ ரிடையூ றைய மீனவ னானை யாலே. ’’

            (திருவிளை 61)
இதுவரையிலும் வாழ்ந்துவிட்டேன். பிட்டு விற்று வாழ்கிற பேதைதான் நான். இடும்பை - துன்பம் என்பது ஒரு

எள்ளளவுகூட இல்லாமல் எப்படி வாழ்ந்து வந்தேன்; இரவியெங் கெழுகென்று இந் நாள் --------சூரியன் எங்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/147&oldid=1291871" இலிருந்து மீள்விக்கப்பட்டது