பக்கம்:அருளாளர்கள்.pdf/156

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சைவ சமயத்தில் ஒளி வழிபாடு 145

இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் கதிரவன் அறிவான்’ என்று பொருள் கூறப்படும். அடுத்து நாவுக்கரசர் கூற்றின்படி, அருக்கன் சிவபெருமானே ஆவான், என்ற கருத்தை வைத்துக் கொண்டு இந்த அடிக்குப் பொருள் செய்தால், எல்லாப் பொருள்களிலும் நிறைந்து அவை அனைத்தையும் மேற் பார்வை பார்க்கின்றவன் சிவன் என்பது வெளிப்படக் காணலாம். எனவே சிலப்பதிகாரக் காலத்தில், அதாவது 2ம் நூற்றாண்டில் கதிரவனை, ஒளி வடிவைப் போற்றி வழிபடும் பழக்கம் இருந்து வந்தது என்பதை அறிய முடிகிறது.

சைவ சமயத்தோடு பெரிதும் தொடர்புடைய லலிதா சகஸ்ரநாமத்தில் பானுமண்டல மத்யஸ்தா’ என்னும் மந்திரம் சூரியன் நடுவே அம்பிகை இருக்கின்றாள் என்று குறிப்பிடுகின்றது. சூரியன் என்று சொல்லும் போதெல்லாம் ஒளியைத்தான் இப்பெருமக்கள் கருதி னார்கள் என்பதை அறிதல் வேண்டும். ஒளி, உயிர்கள் வாழ்வதற்கு மிக இன்றியமையாத ஒன்றாதலின் அவ் வொளியைக் கொடுக்கும் கதிரவனைக் கடவுளாகவே போற்றி வழிபட்டனர் என்பதை அறிய முடிகிறது. ஆறு முதல் எட்டு முடிய உள்ள நூற்றாண்டுகளில் தோன்றிய தேவார திருவாசகங்களும் ஒளி வழிபாட்டைப் போற்று கின்றன.

இருநிலனாய்த் தீயாகி நீருமாகி

இயமான னாயெறியுங் காற்று மாகி

அருநிலைய திங்களாய் ஞாயிறாகி

ஆகாச மாயட்ட மூர்த்தி யாகிப்

பெருநலமுங் குற்றமும் பெண்ணும் ஆனும்

பிறருருவன் தம்முருவந் தாமே யாகி