பக்கம்:அருளாளர்கள்.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சைவ சமயத்தில் ஒளி வழிபாடு 147

என்று பாடுவதால், கார்த்திகை மாதத்தில் ஆலங்காயம், வீடுகள் ஆகிய அனைத்திலும் நூற்றுக் கணக்கான விளக்குகளை ஏற்றி வழிபட்டார்கள் என்பதை அறிகிறோம். ஒண் சுடர்’ என்ற சொல்லிலேயே, அச்சுடரைத் தாங்கி நிற்கும் விளக்கு குறிப்பாக அறியப் பட்டாலும், திருஞானசம்பந்தர் தேவாரத்தின் மூலம் விளக்குகளை வைத்து வழிபடும் பழக்கம் 7ம்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே இருந்து வந்தது என அறிகிறோம். 8ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த சுந்தரர் பெருமான்,

காலமும் ஞாயிறும் ஆகிநின்றார்கழல் பேண வல்லார்- (திருமுறை: 7-9-9)

எனக் குறிப்பிடுகிறார். 8ம் நூற்றாண்டின் கடைசியில் வாழ்ந்த மணிவாசகப் பெருமான் ஒளி வழிபாட்டின் வளர்ச்சியைக் கூறுபவர் போல,

“சோதியே, சுடரே சூழொளி விளக்கே

(திருமுறை: 8-29-)

என்று பாடுகிறார். சோதி என்ற சொல்லால் சுயம் பிரகாசமாக விளங்கும் பேரொளியையும், சுடர் என்றமையால் எல்லைக்குட்பட்டு பற்றுக் கோட்டின் அளவுக்கு ஏற்ப விளங்கும் சுடர் என்றும் மக்கள் வைத்து வழிபடும் ஒளி விளக்கு என்றும் கூறுவதால் பகலில் ஞாயிறு எழுகின்ற நேரத்தில் பேரொளி வடிவாக வழிபட்ட நிலை ஏதோ ஒன்றைப் பற்றி எரியும் பொழுது சுடர் வடிவில் வழிபட்ட நிலை, வீட்டினுள் அமைந்திருக்கும் விளக்கை வழிபட்ட நிலை என்று கூறும் பொழுது வழிபடப்படும் பொருள், பேரொளி, சுடர், விளக்கு என மூன்றாக காணப்படினும் உண்மையில் அவை அனைத்தும் ஒன்றே என்ற கருத்தை மணிவாசகப் பெருமான் பெற வைக்கின்றார்.