பக்கம்:அருளாளர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148 * அருளாளர்கள்


எட்டாம் நூற்றாண்டின் இறுதியில் வந்த திரு மூலர், இறைவனைப் பேரொளி என்றும், ஒளி என்றும், விளக்கு என்றும் பேசுவதைப் பின்வரும் எடுத்துக் காட்டுக்களால் அறியலாம். இப்பெருமக்கள் கதிரவனைக் குறிப்பிடும் போது கூட ஒளியைத் தாங்கி நிற்கும் பொருளாகக் கருதினார்களே தவிர கதிரவனுக்கு என்று தனி மதிப்புத் தரவில்லை. நாமரூபம் அற்ற பரம்பொருள் ஒரு வடிவு பெறுகின்றது என்றால் அது ஒளிவடிவாகவே இருக்கும் என்று இவர்கள் கருதினார்கள் போலும். இறைவன் ஒளி வடிவானவன் என்பதைப் பலப்பல பாடல்களில் திருமந்திரம் பேசுகிறது என்றாலும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே எடுத்துக் காட்டியுள்ளோம்.

“பரமன் அனலாய்ப் பரந்துமுன் நிற்க"

(திருமுறை : 10,372)

“தாமேழ் உலகில் தழல்பிழம் பாய்நிற்கும்"

(திருமுறை : 10,373)

“ஆலிங் கனஞ்செய்து எழுந்த பழஞ்சுடர்"

(திருமுறை : 10,378)

“ஊழிக் கதிரோன் ஒலியைவென் றானே"

(திருமுறை : 10,380)

“சோதி யதனிற் பரந்தொன்றத் தோன்றுமாம்”

(திருமுறை : 10,381)

இறைவனை, கதிரவன், அக்னி என்றெல்லாம் கூறிய திருமூலர் ஒன்பதாம் தந்திரத்தில் ஒளி என்ற தலைப்பில் சோதி தரிசனம் பற்றிப் பல பாடல்கள் பாடுகிறார். அவற்றுள் சிலவற்றை இங்கே தந்துள்ளோம். இடமின்மைக் கருதி முழுப் பாடலையும் தராமல் சிறுசிறுப் பகுதிகளை மட்டும் எடுத்துத் தந்துள்ளோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/159&oldid=1291982" இலிருந்து மீள்விக்கப்பட்டது