பக்கம்:அருளாளர்கள்.pdf/169

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


158 அருளாளர்கள்

சத்திய ஞான சபையை நிறுவி இந்த ஒளி வழிபாட்டிற்கு ஒரு புதிய திருப்பத்தைத் தந்தார். -

பரஞ்சோதி, பேரொளி என்பவற்றை 6AIIrrr) சொல்வது வேறு, அதன் உட்பொருளை உணர்வ தென்பது வேறு. இந்தச் சொல் இந்த பூத உலகில் நாம் கண்ணுல் காணும் சூரிய ஒளியையோ, மின்னல் ஒளியையோ, அணுகுண்டு வெடிக்கும் பொழுது உண்டாகும் பல சூரியர்கள் ஒன்று சேர்ந்த ஒளியையோ குறிப்பதன்று. மனம், வாக்கு முதலியவற்றைக் கடந்து அகத்தின் ஆழத்தில் பயணம் செய்கின்ற ஞானிகள் என்றோ ஒருநாள் தரிசனம் செய்கின்ற பேரொளியையே இச் சொல் குறிக்கின்றது. புற உலக ஒளி கண்ணைக் கூச வைக்கும். ஆனால் இந்த ஒளி பொறிபுலன்களுக்கப்பாற் பட்டதாதலின் இப்பொறி புலன்களை ஒன்றும் செய் வதில்லை.

பொறி புலன்கள் தம் இயல்பை மறந்து, அடங்கிய வழியே அந்தப் பேரொளி அனுபவத்தில் திளைக்கும் பொழுது புறஉலக பொருள்கள், நிகழ்ச்சிகள், பொறி புல துய்ப்புகள் என்பவை செயலற்றுப் போகின்றன. சுண்ணாம்புக் காளவாயில் ஒருவர் தூக்கி எறியப் படுகிறார். சாதாரண நிலையில் ஐந்து நிமிடங்களில் அல்லது பத்து நிமிடங்களில் உப்பும் சதையும் கரைய உயிரைப் போக்கிவிடும் இயல்புடையது அக் காளவாய். ஆனால் ஒருவருக்கு மாசில் வீணையாக, மாலை மதியமாக வீசு தென்றலாக வீங்கிள வேனிலாக, மூசுவண்டறைப் பொய்கையாக அனுபவத்தைத் தருகிறது என்றால் அது எவ்வாறு முடிந்தது? ஈசன் இணையடி நீழல் என்ற பேரொளியிற் புகுந்தவர்களின் உடம்பு சுண்ணாம்புக் காளவாயில் இருந்தாலும் ஒன்றும் நேருவதில்லை. அவர்களின் உடம்பைப் பேரொளிக்கவசம்