பக்கம்:அருளாளர்கள்.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 திருமூலர் *9 ‘ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம் நடுங்குவ தில்லை நமனும் அங்குஇல்லை இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே’

       (திருமந்-1624)

இத்தகையவர்கள் உலகத்தில் வாழும்பொழுது துன்பத்தை அனுபவிப்பதில்லை ஏன்? நமனும் அவர்களை அச்சுறுத்து வதில்லை. இதைவிடச் சிறந்த வாழ்க்கை எதுவாக இருக்க முடியும்?

‘Mystics என்று மேனாட்டார் கூறும் இம்மெய்ப் பொருள் அறிவு பெற்றார் என்ன பேருண்மையைக் கண்டார்கள்? உண்மை உணர்ந்த பெரியார்கள் அவர்கள், உலகம், அதன் தோற்றம், அதன் உண்மைநிலை முதலிய வற்றைக் கேவலம் புறச்சாதனங்கள் கொண்டு ஆராயாமல் இவர்கள் உண்மை காண்கின்றனர். திருமூலர் கண்ட உண்மை யாது ?

“எங்கும் திருமேனி எங்கும் சிவசத்தி எங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம் எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும் தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.

       (திருமந்-2722)

உலகம் முழுமையும் இறைவனாகக் காண்பதே அக்காட்சி. இங்ஙனம் கூறியதால் இவ்வுலகையும் மக்களையும் சட்டை செய்யாதவர்களோ இவர்கள் என்ற ஐயங் கொள்ள வேண்டா. உலகமே இறைவன் வடிவம் என்றால் மக்களும் இறைவன்தானே. எனவே, இறைவனுக்குச் செய்யும் தொண்டைவிட, மக்கட்குச் செய்வதே சிறந்தது என்பது திருமூலர் கண்ட உண்மை.

2