174 * அருளாளர்கள்
'கர்மத்தை யென்சொல்வேன் மதியையென்சொல்லுவேன்
கைவல்ய ஞான நீதி நல்லோ ருரைக்கிலோ கர்மமுக் கியமென்று
நாட்டுவேன் கர்ம மொருவன் நாட்டினா லோபழைய ஞானமுக் கியமென்று
நவிலுவேன் வடமொழியிலே வல்லா னொருத்தன்வர வுந்தரா விடத்திலே
வந்ததா விவக ரிப்பேன் வல்லத்தமி ழறிஞர்வரின் அங்ஙனே வடமொழியின்
வசனங்கள் சிறிது புகல்வேன் வெல்லாம லெவரையும் மருட்டிவிட வகைவந்த
வித்தையென் முத்தி தருமோ வேதாந்த சித்தாந்த சமரசநன் நிலைபெற்ற
வித்தகச் சித்தர் கணமே'.
. (சித்தர்கணம் : 9)
என்ன ஆச்சரியமான சொற்கள். கல்லாத பேர்களே மிக நல்லவர்கள் என்று சொன்னால் அது நியாயமா? படித்தும் பயன் இல்லாது போன என் அறிவை என்னென்று சொல்வது? ஆகவே, கல்லாத பேர்களே நல்லவர்கள் என்று பேசிவிட்டு அதற்கு உரிய காரணத்தை மிக அற்புதமாகப் பேசுகிறார்.
“கைவல்ய ஞானந்தி நல்லோ ருரைக்கிலோ கர்மம் முக்கியமென்று, நாட்டுவேன்". ஒரு பெரியவர் வந்து ஞான மார்க்கத்தைப் போதித்தால் கர்மம் முக்கியமென்று நாட்டுவதற்காகவே (வாதம் பண்ணுவதற்காகவே) அவர் சொல்லுகிற ஞானமார்க்கத்தை விட்டு கர்மமார்க்கம் தான் சிறந்தது என்று சொல்லுவேன். கர்மத்தை ஒருவன் பேசினால் அவனுடன் போரிடுவதற்காகவே ஞானம் மிக உயர்ந்தது என்று சொல்லுவேன். வடமொழி படித்த