பக்கம்:அருளாளர்கள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 * அருளாளர்கள்


வந்தாய்?" என்றவுடன் நான் அச்சத்தோடு நடந்தவற்றைக் கூறினேன். சுவாமிகள் கடகடவென்று சிரித்துவிட்டு, “அந்த மடையனுக்குத்தான் மயிலிருக்கிறது. நாங்கள் எப்படி அங்கே போகமுடியும். மயிலா இருக்கிறது நமக்கு?"என்று கூறிச் சிரித்தார். அட்டமா சித்திகளில், வேறொருவர் காணாமல் ஒரே நேரத்தில் பல இடங்களில் இருக்கும் சிறப்பு சித்தர்களுக்குரியது என்பதைப் படித்திருக்கிறேன். ஆதலால் மனத்தில் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, “சுவாமிகள் அங்கே இருந்ததும் உண்மை. இது அட்ட.” என்று தொடங்கினேன். அந்த வார்த்தையை முழுவதும் கூறவிடாமல் சுவாமிகள் உரத்தகுரலில், “பொடியா! செருப்படி வேண்டுமோ மகனே உனக்கு: வாயை மூடடா" என்றார்கள். பிறகு அன்பொழுகப் பேசிக் கொண்டிருந்தார்கள். மறுநாள் நான் சென்னை மீண்டு விட்டேன். யோகர் சுவாமிகள் எல்லாம் வல்ல சித்தர் என்பதற்கு தலையாய எடுத்துக் காட்டு இதுவாகும்.

என் நினைவில் ஆழமாக நின்றதைக் கூறலாம். ஒரு முறை யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் சொற்பொழிவு ஆற்றுவதற்காக பல்கலைச் செல்வர் டாக்டர். தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், டாக்டர் டி. எம். பி. மகாதேவன், நான் ஆகிய மூவரும் சென்றிருந்தோம் அமைச்சர் நடேசன் அவர்கள் வீட்டில் தங்கி இருந்தோம். திரு. தெ.பொ.மீயும் நானும் சுவாமிகளிடம் செல்லும் வாய்ப்பை முன்னரே பெற்றிருந்தோம். திரு மகாதேவனுக்கு இது புதிய அனுபவம். நான்கு நாட்களும் சொற்பொழிவுகள் முடிந்தவுடன் சுவாமிகளிடம் சென்று ஒருமணி நேரம் தங்கி அவர்கள் ஆசீர்வாதத்துடன் திரும்புவது வழக்கம். முதல் மூன்று நாட்களிலும் பல திருவிளையாடல்களை சுவாமிகள் செய்தருளினார்கள். திரு. மகாதேவன் ஏதாவது பலகாரம் செய்து சுவாமிகளுக்கு அதை நைவேத்தியமாகப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருளாளர்கள்.pdf/245&oldid=1292043" இலிருந்து மீள்விக்கப்பட்டது