பக்கம்:அருளாளர்கள்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


40 அருளாளர்கள்

விஞ்ஞான அறிவு முதிர்ந்த இக்காலத்திற்கூட மறுக்க முடியாதபடி இறைவனை வருணிக்கின்றார். “ஞாலமே, விசும்பே, இவை வந்துபோம் காலமே உனையென்று கொல் காண்பதே’’ திருவா:5,3 என்றும், “சென்று சென்று அணுவாய்த் தேய்ந்து தேய்ந்து ஒன்றாய்” “(நின்ற நின்தன்மை) என்றும் கூறுகிறார். இவ்வடிகளில் அவன் தன்மை, காலம் என்றும் அணு என்றும் குறிக்கப் பட்டிருத்தல் கருதற்பாலது. உலகம் முழுதும் மின் அணு (Electron). பரமானு (Proton) வடிவாய் இலங்குகின்றது என்று அறிவியல் நூலால் முடிபு கொண்டுள்ளனரன்றோ. மேலும், அணுக்கள் தாம் ஒயாது சலித்துக் கொண்டிருக் கின்றன என்பதும் அவற்றை அவை நிறுத்துமாயின் உலகம் அழிந்து விடும் என்பதும் அன்னார் கொள்கையன்றோ! அதனையேதான் நடராசப் பெருமான் ஓயாது நடனம் செய்து கொண்டிருக்கின்றான் என்றும், அவன் ஆட்டத்தை நிறுத்துவானாயின் உலகம் அழியுமென்றுங் கூறுவர். மணிமொழியார், “தாயும்இலி தந்தைஇலி தான் தனியன் ஆயிடினும் காயில் உலகனைத்தும் கற்பொடிகாண் சாழலோ (திருவா: 12, என்று கூறுவது அதனையே வலியுறுத்தும்.

உயிர் அடையவேண்டிய இலக்கு இஃதென்பதையும் அதன் பெருமையையும் உணர்த்திய பின்னர் அதனை அடையும் ஆற்றை உணர்த்துகின்றார் ஆசிரியர், இத் துணைப் பெருந்தலைவனை மனம்மொழி மெய்யென்ற மூன்றாலும் வேண்டல் வேண்டுமன்றோ! அதனையே ஆசிரியர், -

“சிந்தனை நின் தனக்காக்கி, நாயினேன்றன்

கண்ணிணை நின் திருப்பாதப் போதுக்காக்கி, வந்தனையும் அம் மலர்க்கே யாக்கி, வாக்கு உன்

மணிவார்த்தைக்கு ஆக்கி’ (திருவா:(3.6) வழிபட வேண்டும் என்று மொழிகின்றார்.