பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

18

அருள்நெறி முழக்கம்


இருக்கின்ற நகைகளை விற்றுவிட்டால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின் என்ன செய்வது என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆலயங்களின் பெயரால் பஜனை மடங்களின் பெயரால் நிதி திரட்டுங்கள். இவைகள்தான் தமிழ்நாட்டின் பொதுஉடமைச் சொத்து ஏனைய அனைத்தும் தனிமனிதனின் வாழ்வு கருதித்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆலயங்களில் உள்ள சொத்துக்கள் அனைத்தும் பொதுமக்களின் வாழ்விற்குத்தான் பயன்படும் என்பதை எல்லோரும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

கண்ணனை வாழ்வின் லட்சியமாகக் கொண்டு கீதை வழியைப் பின்பற்றி வாழ்க்கையை நடத்தினால் நம்முடைய அன்றாட வாழ்வில் நம்மை வந்து சேருகின்ற துன்பங்கள் அனைத்தும் விரைவில் விலகிவிடும். துன்பம் சூழ்ந்து நின்ற இடத்தில் எல்லாம் இன்பம் பெருக்கெடுத்தோடும். “உன் வாழ்வில் துன்பமெனும் திரை அகன்று அங்கு இன்பமெனும் ஒளி உண்டாக வேண்டுமானால் நீ எக்காலத்தும் ஆண்டவனை மறவாதே. மறந்ததினால்தான் நீ இவ்வுலகில் துன்பத்திற்கு ஆளானாய்” என்று ஒரு பெரியார் எழுதியிருப்பது நம் உள்ளத்தில் அழியாத இடத்தைப் பெறுதல் வேண்டும். இவ்வுலகில் கண்ணன் நாமத்தை நாம் உள்ளத்தூய்மையோடு தினந்தோறும் பிரார்த்தனை செய்து வந்தால் கண்ணன் பாரதி பாடியபடி பல்வேறு உருவங்களில் தோன்றி நமக்கு உதவிபுரிவான் என்பதில் சந்தேகமில்லை.

இந்நகர் ஆரிய வைசிய சமூகத்தினர் சிறுகச் சிறுகச் சேர்க்கின்ற பண்பை மேற்கொண்டு பெரியதோர் திட்டமான கல்வித் திட்டத்தை நல்லதொரு முறையில் நடத்துவது கண்டு மட்டற்ற மகிழ்ச்சி. குறைந்த திட்டத்தில் மகமை வசூலிலிருந்து இக்காரியம் செய்து வருவது நாட்டிற்கே ஒரு பெரிய தொண்டாகும். பண்டைத் தமிழகத்தில் சிறுகச் சிறுகக் கொடுக்கின்ற பண்பைத் தலையான தொண்டாகக் கருதிக்கொடுத்தார்கள். அதனைத் தொண்டர் குழாமும் வசூலித்து