பக்கம்:அரை மனிதன்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ரா. சீனிவாசன்

111



“உன்னை வெளியே விட்டால்”

“மறுபடியும் திருடுவேன்”

“அதனால்?”

“உள்ளே போவதுதான் நல்லது. கொஞ்ச நாள் நான் கஷ்டப்பட வேண்டி இருக்காது, ஏன் நீ கூட என் கூடத்தானே வரப் போகிறாய்?” என்று கேட்டான்.

அவன் என்னோடு தோழமை கொண்டாடினான்.

என்னோடு ஒரு 'அம்மாகண்ணு' அழைத்து வரப்பட்டாள். அவளை விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.

“உன் பெயர் என்ன?”

“காந்தா”

“நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்தாய்?”

“அழகாக இருப்பதால்”

“மூஞ்சைப்பாரு” என்று ஒருவன் அங்கே முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

அவள் அழகாக இருந்தாள். இவன் முணுமுணுப்பதற்கு நியாயமே இல்லை.

“வேறு தொழில் ஏதாவது”

“இன்னும் இந்த நாடு அவ்வளவு தூரம் முன்னேற்றம் அடையவில்லை” என்றாள்.

குற்றவாளிகளை உள்ளே அனுப்புவதால் பயன் இல்லை. அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும். நான் ஒருத்திக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுத்தேன். ஒரு ரவுடியைத் திருத்த முடிந்தது. அவனைச் சமூக மனிதனாக மாற்ற முடிந்தது. இந்தக் குறவனையும் இவளையும் எப்படித் தனி ஒருவனால் மாற்ற முடியும். சமுதாயம் இதைப்பற்றித் தீவிரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/113&oldid=1462010" இலிருந்து மீள்விக்கப்பட்டது