பக்கம்:அரை மனிதன்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

அரை மனிதன்


பரம்பரை ஆண்டி அல்ல; பஞ்சத்து ஆண்டி என்பதால் என்னை மதித்தான்.

"அவளை எங்காவது ஓடிவிடச் சொல்" என்றான்.

"அவள் எல்லா இடத்திலும் ஒடி அலுத்துத்தான் இங்கே வந்திருக்கிறாள்."

"உங்கள் 'சப்போர்ட்டு அதனால்தான் தைரியம் வந்து விட்டது அவளுக்கு."

அவள்தான் எனக்கு ஆதரவு என்பதை எப்படி விளக்க முடியும்.

"இப்பொழுது பழகுவது இல்லை, நிறுத்திவிட்டேன்" என்றேன்.

"அதுதான் நினைத்தேன், ஏன் அண்னே நான் அவளை".

"கலியாணம் பண்ணிக்கிறியா"

"அது நம்ம அகராதியிலே எப்படிண்ணே முடியும்"

"அப்படின்னா"

"அவளை நான் ' கீப்பாகத்' தான் வச்சிக்க முடியும். அடிக்கடி நான் பிரிய வேண்டுமே. என் ஆட்சி விக்கிரமாதித்தன் ஆட்சி தானே! காடாறு மாதம் நாடாறு மாதம்."

"அவள் இஷ்டம்" என்றேன்.

அதற்குள் அம்மாகண்ணு அங்கு வந்தாள்.

"என்ன சொல்றே அம்மாகண்ணு" என்றேன்.

"எதைப்பற்றி"

"ரங்கன்"

"அதுவா நடக்காது. நாம் ரவுடிகளுக்கு எல்லாம் பணிந்து விட்டால் அப்புறம் நமக்கு என்ன மதிப்பு இருக்கிறது. என்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/64&oldid=1461961" இலிருந்து மீள்விக்கப்பட்டது