பக்கம்:அரை மனிதன்.pdf/76

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

அரை மனிதன்


மடையர்களும் கை கோர்த்துக் கொண்டு ஆடுகிறார்கள். அவர்கள் உடையில் பிரமாதமாக மிகப் பெரிய மனிதர்களாகக் காணப்படுகிறார்கள். உடையை நீக்கிவிட்டால் (தவறாக நினைக்க வேண்டாம்) உள்ளத்தை மட்டும் பார்த்தால் இந்தக் கூட்டத்தாருக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லையென்றுதான் என்னால் கூற முடிகிறது.

குடியும் கும்மாளமும் இவர்கள் இரவு நேர விளையாட் டுகள்: பொழுதுபோக்கு. யார் எவர் என்ற வேறுபாடு இவர்களுக்கு அதிகமாகத் தெரிவதில்லை. சே! இதெல்லாம் நான் எப்படி எழுதுவது?

இந்த இரண்டு வர்க்க மனிதர்களைப் பார்த்த பிறகுதான் மத்தியதர மக்களின் அருமை பெருமை எனக்குத் தெரிகிறது.

கொள்கைகளுக்காக வாழ்கின்ற மாணிக்கங்களை அங்கே பார்க்க முடிகிறது. கால் இழந்த ஒரே காரணத்தால் நான் இந்தக் கூட்டத்தில் வந்து சேர்ந்தேன். பாசபந்தங்களோடுதான் பழகினேன். ஆனால் மேல்மட்டப் பழக்கங்கள் அனைத்தும் இவர்களிடம் குடிகொண்டு இருந்தன.

கள்ளக் கடத்தல், குடி, சமுதாய ஒழுங்குகளை மீறுதல் எல்லாம் இரண்டிடங்களில் நிலவுகின்றன. அவர்கள் சேர்த்து வைக்கிறார்கள். இவர்கள் செலவு செய்கிறார்கள். இதுதான் வித்தியாசம்.

என்னால் அங்கு இருக்க முடியவில்லை. சலிப்பு ஏற்பட்டு விட்டது. அவளை அங்கு விட்டு வரவும் முடியவில்லை. அவள் மேல் மட்டத்துக்கும் பயன்படுவாள்; கீழ் மட்டத்துக்கும் அவள் தேவைப்படுகிறாள். ஆனால் நான் வாழ்ந்த இனம், வாழ விரும்பும் இனம் அங்கே இவளுக்கு இடமே கிடையாது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த வகையில் யோக்கியமாக வாழ்வதைத் தவிர வேறு அறியாத அப்பாவிக் கூட்டம், நான் வாழ்ந்த பிறந்த கூட்டம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/76&oldid=1151125" இருந்து மீள்விக்கப்பட்டது