உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அரை மனிதன்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரா.சீனிவாசன்

87



பின்னது தளர்ச்சி பெற்றது. கீழே விழுந்தது நான். மேலே இருக்கின்றவன் அவன். மறுபடியும் பழைய நிலைக்கு வரவேண்டும். நானும் என் நிலைக்குச் செல்ல வேண்டும். மறுபடியும் நாங்கள் சகோதரர்களாக வாழ வேண்டும். எங்களுக்குள் வேற்றுமை இருக்கக் கூடாது. ஒரு தாய் வயிற்று மக்கள் நாங்கள். எங்களுக்குள் ஏன் இந்த வேற்றுமை பெருக வேண்டும். இதுதான் இந்த நாட்டின் கேள்வியும், எங்கள் வீட்டின் கேள்வியும்.

அவன் அம்மாகண்ணுவை நாடியது அவனுக்குப் பெரிய வீழ்ச்சி. அவளை அவன் தவறாகப் பயன்படுத்துகிறான். அவள் ஒழுக்கத்தைச் சிதைக்கிறான். சிதைந்து விட்ட வாழ்க்கை தான். அதை மேலும் நாசப்படுத்துவதற்கு அவன் துணை செய்கிறான். நான் அவளை உயர்த்த விரும்புகிறேன். ஒழுக்கங்கள் சிதைகின்றன. அவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும். இந்த முயற்சியில் நான் இருக்கிறேன். மறுபடியும் அவற்றைக் கெடுப்பதில் அவன் இறங்கி விட்டான்.

விழுந்து விட்ட சமுதாயத்தை உயர்த்த வேண்டும். ஆனால் நான் நொண்டி. என்னைப் போலவே என் சூழ்நிலை ஊனமுற்றதாக இருக்கிறது. அவள் தன் பெருமையை இழந்தவள்; நான் என் பிறப்பில் குறைபாடுகள் கொண்டவன். நாங்கள் குற்றவாளிப் பட்டியலில் இடம் பெற்றவர்கள். ரங்கன் படம் பத்திரிகையில் வரவில்லை. ஆனால் பொது இடங்களில் விளம்பரப்படுத்தப்பட்ட குற்றவாளிகள் ஜாக்கிரதை என்ற பட்டியலில் இடம் பெற்றான்.

அறுப்புக்காரக் கந்தனை யாரோ அடித்துப் போட்டு விட்டார்களாம். அவன் இந்தக் கடைக்காரர்களைத் தொந்தரவு செய்து கொண்டு இருந்தான். ஒரு தட்டான் கடையில் புகுந்து அவர்களிடம் வீண் வாதம் வைத்துக் கொண்டான். 'எடு' என்று கேட்டு இருக்கிறான். சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள். அவர்களுக்குத் திடீர் என்று கோபம் வந்து விட்டது. மக்கள் புரட்சி உள்ளம் அவர்களிடம் இயல்பாய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அரை_மனிதன்.pdf/89&oldid=1461986" இலிருந்து மீள்விக்கப்பட்டது