பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/6

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.4

மக்களிடையே போதிய மதிப்பையும் மரியாதையையும் பெற இயலாமற் போயிருக்கிறது.

கடும் வெயிலில் வரிசையில் நின்று, 'கிடைக்குமா கிடைக்காதா' என்ற ஏக்கத்துடன் துடித்து, பிறகு பெறுகிற சிறு பொருள்கள்கூட மனிதர்களுக்கு மாபெரும் மகிழ்ச்சியை ஊட்டுகின்றன. ஏனென்றால், அவைகள் கஷ்டப்பட்ட பிறகே கிடைப்பதாகும்.

விளையாட்டுகள் கூட, பணம் கட்டி விளையாடும் போது பெருமைகள் பெறுகின்றன. அதற்கு கிரிக்கெட் ஆட்டம் ஒரு சான்றாகும்.

ஆனால், தினையளவு இருந்தாலும், பனையளவாகப் பயன் அறிவார் ஏற்று மகிழ்வார்கள். அது போலவே, விளை யாட்டின் பயன் தெரிந்து, பொது மக்கள் உயர்வு பெற வேண்டும் என்று வழிகாட்டும் முயற்சியின் வடிவம் தான் இப்படி ஒரு எழில் நூலாக வெளிவந்திருக்கிறது.

குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டு தான் கிடப்பார்கள். அவர்கள் திருந்தவும் மாட்டார்கள். திருத்தவும் வாய்ப்பளிக்க மாட்டார்கள்.

என்றாலும் ஒரு நாள் அவர்கள் 'நம் பக்கம் வந்து தான் ஆகவேண்டும்’ என்ற நம்பிக்கையுடன் எழுதிக் கொண்டிருக் கிறேன்.

வைத்தியர்கள் 'உடற்பயிற்சி செய்! கொஞ்ச நேரமாவது விளையாடு' என்று கடுமையாக அறிவுரை கூறுகிற போது தான், உடல் நலிந்து தேற வேண்டும் என்று முயற்சிக்கிற போதுதான், நாம் கூறுகிற உண்மைகளும் செய்கிற உதவிகளும் தெரியும், புரியும்.