பக்கம்:அர்த்தமுள்ள விளையாட்டுக்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61


பிறகு, ஏற்படுகின்ற பிரச்சனைகளைப் போக்கிவிட புதுப் போராட்டம்,

எனவே, ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வாழ்க்கை என்பதே ஒரு போராட்டம் தான். அதை சந்திக்கவும், சந்தோஷமாக வெற்றிபெறச் செய்ய சிந்திக்கவும் கூடிய ஒரு பெரிய பணியைத்தான் நாம் தினந்தோறும் செய்து கொண்டிருக்கிறோம்.

எளிதாக எண்ணி செயல்படுகின்றவர்களின் வாழ்வு ஏற்றமாக இருக்கிறது. அரிது என்று அரற்றிக்கொண்டே துடிப்பவர்கள் வாழ்வு இரக்கமாகவே போய் விடுகிறது.

காரணம் என்ன?

பல நோய்களுக்குக் காரணம் மனம் தான் என்ற முடிவுக்கு மருத்துவர்களும், மனோ ஆராய்ச்சி வல்லுநர்களும் வந்திருக் கின்றர்கள். உதாரணத்திற்கு ஒன்று. மன உலைச்சல் அதிகம் உள்ளவர்களுக்கு மூச்சடைப்பு நோய் அதாவது ஆஸ்த்மா, அல்சர், முதுகுவலி மற்றும் எதிர்பாராத நோய்கள் எல்லாம்மே வந்து தொலைக்கின்றன.

அதிக மன உலைச்சல், இயற்கையான சுவாசத்தை மாற்றி விடுகிறது. அதனால் சுவாச கோசங்கள் சிறிது சிறிதாகப் பாதிக்கப்படுகின்றன. அதிகமான படபடப்பும், எரிச்சலும், பயத்தை உண்டு பண்ணுகின்றன. ஆங்காரமான கோபத்தை உண்டு பண்ணுகின்றன. பலன்?

உடலில் உள்ள ஹார்மோன்கள் அதிகமான அளவிலே சுரந்து விடுகின்றன. அதனால் இரத்தத்தில் சர்க்கரை அதிகமாகி விடுகின்றன. இப்படி படபடப்பும் உலைச்சலும் தொடரத் தொடர, சர்க்கரைப் பொருட்கள் இரத்தத்தில் தங்கி விட , அதுவே நீரிழிவு நோயாக மாறி விடுகின்றன.