பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 அர்த்த பஞ்சகம் இடைப் பெண்கள் கண்ணனிடம் பெற வேண்டிய வெகுமானச் சிறப்புகைெளச் சொல்லுகின்றார்கள். 'பாடகம் முதலிய ஆபரணங்களையெல்லாம் உன் கையால் எங்களுக்குப் பூட்ட நாங்கள் அணியப்பெற்ற வர்களாக வேண்டும்; அங்ங்ணமே ஆடைகளையும் நீ உன் கையால் எங்கட்கு உடுத்த நாங்கள் உடுக்கப் பெற்ற வர்களாக வேண்டும்' என்கின்றனர், சூடகம் பாடகம் முதலியவற்றிற்கு மற்றொரு விவரணமும் காணலாம், சூடகம் என்பது கையிலணிவது; இஃது அஞ்சலி பந்தத்தைக் குறிக்கும். தோள்வளை என்பது தோளில் அணியப் பெறுபவை. 'சக்கரத்தின் கோயிற் பொறியாலேயொற்றுண்டு நிற்கை புயபூஷணம் (தோள் வளை) தோடு, காதிலணிவது. முதலில் உபதேசம் பெறுங் காலத்தில் தெரிந்தும் தெரியாமலும் மந்திரத்தைக் காதில் புகவிடுவது தோடு. செவிப்பூ-காதில் உச்சியில் அணிவது; பின்னர் பொருட் சிறப்பைப் பரக்கக் கேட்பிப்பது செவிப்பூ. பாடகம்-காலில் அணிவது. திருவடிகளால் நடந்து திவ்விய தேசங்களில் யாத்திரை செய்வது பாத பூஷணம் (பாத கடகம்-பாடகம்). தவிர, அடியார்கள் குழாங்களுடன் கூடியிருந்து குளிர்வதுதான் பரம புருஷார்த்தம் என்பது தெரிவிக்கப்பட்டதாகின்றது. 'கறவைகள் பின் சென்று' (28) என்ற இருபத்தெட்டாம் பாசுரத்தில் தெரிவிப்பவை எவை? முன்னர் போற்றியாம் வந்தோம்'(21), செங்கண் சிறிதே எம்மேல் விழியாவோ? (22), 'உன்னை அருத்தித்து வந்தோம் (25) என்பன போன்ற பாசுரங்களில் தங்களுக்குள்ள பிராப்யருசியை வெளியிட்டனர். அந்தப் பிராப்யத்தைப் பெறுகைக்கு உட லாகத் தங்களுடைய ஆகிஞ்சந்யத்தையும் உபாயத்துவத் 3. ஆகிஞ்சந்யம்-கன்மஞான பக்திகளாகிற மற்ற உபாயங்களில் தொடர்பற்றிருந்தல்.