பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/12

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


சிறப்புப்பாயிரப் பாமாலை
புலவர் வீர. அரங்கனார்

தமிழாசிரியர் - தலைமையாசிரியர் (ஒய்வு)

நாராண்மைக் கழக உயர்நிலைப் பள்ளி,

விழுப்புரம்


1. உலகு புகழ் வேங்கடத்துள்
ஒங்குபுகழ் தமிழ்த்துறைக்கு
அலகில்புகழ் சேர்த்தவராம்
ஆற்றல்மிகு தமிழ்த்தலைமை
நிலவிடவே முதல்வராய்
நிறுவனத்தின் தோன்றலவர்
குலவிடவே நம்சுப்பு
ரெட்டியார் சென்றார்கள்.


2. சென்றார்நம் வேங்கடவன்
பல்கலையின் கழகத்துள்,
நன்றாகும் தமிழ்த்துறையின்
துரையாகி நலஞ்சேர்த்து
குன்றாத கொள்கையெனக்
குலமனித நேயத்தால்
மன்றம்புகழ் மதிநலத்தால்
மாமனிசர் ஆனார்கள்.