பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


viii

3.மாமனிசர் இவரென்றால்
மாநிலந்தான் போற்றுகின்ற
சேமஞ்சேர் மலைக்கோடு
பெற்றதெனத் தமிழகத்தின்
மாமய்யம் திருச்சிமா
வட்டத்தின் துறையூரார்
நாமுயர்ந்தோம் என்றுரைக்கும்
நல்லாசான் பொறுப்பேற்றார்.

4. நல்லாசான் நலஞ்சேர்க்கும்
துறையூரில் முதன்முதலில்
எல்லாரும் மகிழ்ந்திடவே
எங்கள்ஜமீன் துரையமைத்த
நல்லார்கள் போற்றிடவே
உயர்பள்ளி நண்ணியவர்
வல்லவராய் மிக உயர்ந்தோர்
வளங்கண்டார் மாண்புற்றார்.

5.வளங்கண்டு மாண்புற்றார்
வாழ்வுக்கு ஏற்றதென
உளங்கொண்டு ஆங்கிலத்தின்
உயர்பட்ட தாரிஇவர்
களங்கண்டார் நற்றலைமை
ஆசிரியர் ஆனாலும்
களம்காணும் கம்பன்கவி
நயத்தினையும் சுவைத்தளித்தார்.

6. கம்பன்கவி நலங்கண்டு
துடிக்குமந்நாள் தனிலாங்கோர்
கம்பன்அடிப் பொடியெனவே
தனைக்கூறி வாழ்ந்திட்ட