பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/138

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பயனை அடையும் வழிகள் 111 நிற்கின்ற காதலாகிற கொடிய பாவங்களால் நீ வருவதற்குச் சம்பாவனையுள்ள பக்கத்தை நோக்குவேன்; வரக் காணாமையால் நாணங்கொண்டு தலை குனிந்திருப்பேன்; செழுமை பொருந்திய அழகிய வயல்களால் சூழப் பெற்ற திருக்குடந்தை என்னும் தில்விய தேகத்தில் திருக்கண் வளர்கின்றவனே! செந்தாமரைக் கண்ணா! வேறு கதி இல்லாதவனாய்த் தொழுகின்ற என்னை உன் திருவடி களைச் சேரும்படி ஒரு நல்விரகு பார்க்க வேண்டும். (5) இயல்பாக அமைந்த புகழையுடைய பெரியோர்கள் நித்திய வாசம் பண்ணும் திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! நித்திய சூரி களுக்குத் தலைவனே! யாழின் இசையே! அமுதே அறிவின் பயனே! அரி ஏறே! என்னுடைய பழமையான இருவினை களையும் அறுத்து உன் திருவடிகளைச் சேர்வதற்குரிய முறையை யான் அறிந்திருந்தும் துர்க்க முடியாத இந்திரியங்களாகின்ற குழியை நிறைத்துக் கொண்டு எவ்வளவு காலம் உன்னை நீங்கி இருப்பேன்? உன்னைச் சேர்வதற்குரிய உபாயத்தைச் செய்தருள வேண்டும். (6) அரி ஏறே! அழகிய பொன்னின் சுடரே! சிவந்த கண் களையுடைய கரிய முகிலே! நெருப்புப் பொருந்திய பவளக் குன்றே! நான்கு திருத்தோள்களையுடைய எந்தையே! உன்னுடைய திருவருளாலே என்னைப் பிரிதல் இல்லாத அடிமை கொண்டவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்ற திருமாலே! இனி, தரித்திரேன்; உன்னுடைய திருவடிகளைத் தந்து என் பிறவியை நீக்குவாய். (7) வளைந்த வாயையுடைய சக்கரத்தைப் படையாக உடையவனே! திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளு கின்றவனே! மாமாயனே! என் துன்பத்தைப் போக்குவாய்;