பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


1 #6 அர்த்த பஞ்சகம் ஆறும் (5.10) என்ற திருவாய்மொழியால் விளக்கம் அடைகின்றது. 'உன்னைப் பிரிந்து நோவு பட்டாலும், தரித்து நின்று குணாநுபவம் பண்ணுவதற்கேற்ற ஆற்றல் அருள்வாயாக’ என்று அவன் திருவடிகளில் சரணம் புகு குன்றார். 'கோவிந்தன் குணம் பாடி......ஆவி காத்திருப் பேன்" (நாச். திரு. 8:3) என்ற பாசுரம் நினைவு கூர்தற் பாலது. - பிறந்தவிதமும் வளர்ந்தவிதமும்மகாபாரதப்போரிலே அணிகளை வகுத்துப் பாண்டவர்கட்குப் பல திறங்களை யும் காட்டிக் காரியங்களைச் செய்து தன்னுடைய சோதிக்கு எழுந்தருளிய ஆச்சர்யமான காரியங்களும் மார்பினுள்ளே நுழைந்து என்னுடைய உயிரை உருக்கி நின்று நின்று உண்கின்றன; இந்தச் சிறந்த வான் சுடரே! உன்னையடைவது என்று கொல்? -- (I) கல்யாண வார்த்தைகள் பிறந்த அளவிலே இடபங் களின் மேல் வீழ்ந்து அவற்றைக் கொன்றதும் வஞ்சனை பொருந்திய கேசி என்பவனுடைய வாயினைப் பிளந்த தும், தேன் சிந்துகின்ற கூந்தலையுடைய பெண்களோடு குரவைக் கூத்தினைக் கோத்து ஆடிய சாமர்த்தியமும் அது இது உது என்னலாவன அல்ல; உன் செய்கைகள் என்னை நைவிக்கும்; ப ைழ ைம ய ர ன உலகங்கட்கெல்லாம் முதல்வனே! உன்னை என்று வந்து சேர்வேன்? (2) பூக்களை வைத்த கூந்தலையுடைய பூதனையினது பாலை உண்ட பிள்ளைத் தனத்தில் தெளிவும், வஞ்சனை யினால் ஒப்பற்றவனான சகடாசுரன் இடம் விட்டுப் பெயர்ந்து சென்று அழியும்படி சிவந்த ஒரு திருவடியினால் உதைத்துத் தள்ளிய நின் சிறிய வீரமும், நெய்யை உண்ட வார்த்தை பிறந்த அளவிலே தாயானவள் கோலினைக் கையிலே எடுக்க உன் தாமரை போன்ற திருகண்களில்