பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடையும் வழிகள் 12 f கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பனாதலால்' (திருப். 19) அடியார் காரியத்தைச் செய்ய நினைத்து உணர்வதற்கு முன்னர் அறிவற்றதொரு பொருளாக வன்றோ தன்னால் எண்ணப்படுவன்போலும்! யாம் வந்த காரியம்: இப்போது இவர்கள் வந்த காசியம் இயம்ப வில்லை; காரணம், சொல்லிவிட்டால் சுதந்திரனாகிய இவன் மறுத்தாலும் மறுக்கக் கூடுமென்று அஞ்சி, சற்றுத் தாமதித்து விண்ணப்பம் செய்கின்றனர் - "சிற்றஞ் சிறு காலே' (29) என்ற பாசுரத்தில். 'அன்றிவ்வுலகம் (24) என்ற இருபத்து நான்காம் பாசுரத்தில் கண்ணன் புறப்பட்டு வர, இவர்களும், தண்ட காரணிய முனிவர்கள் தாம் இராக்கதர்களால் தமக்கு நேரிடும் துன்பங்களைச் சொல்லி முறையிட வேண்டும் என்று நினைந்திருத்ததை மறந்து, இராமபிரானைக் கண்டவுடன் மங்களாசாசனம் பண்ணத் தொடங்கினாற் பேலே, தங்கள் மனோரதங்களை மறந்து இத்திருவடி களைக் கொண்டோ இவனை நாம் நடக்கச் சொல்லு வது?’ என்று வருந்தி, பண்டு உலகளந்த வரலாற்றையும் சகடம் உதைத்த வரலாற்றையும் நினைந்து வயிறெரிந்து இத்திருவடிகட்கு ஒரு தீங்கும் நேரா தொழிய வேண்டும் என்று மங்களாசாசனம் செய்கின்றனர். ‘அடிபோற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி என்று இவர்கள் நாக்கிற்கு அறு சுவை அடிசில் இடுவதுபோல் ஷட்ரசமிட்டு மகிழ்கின் றனர். இன்று யாம் வந்தோம்; இரங்கியருள்வாய்' என்கின்றனர். பிரபத்திக்கு அடிகோலுகின்றனர். ஒருத்தி மகனாய் (25) என்ற இருபத்தைந்தாம் பாசுரத்தில், 'உன்னுடைய திருக்குணங்களை நாங்கள் பாடிக்கொண்டு வந்தமையால் வருத்தமும் படாமல் சுக மாக வந்தோம். பறை என்ற வியாஜ்யத்தையிட்டு