பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அர்த்த பஞ்சகம் னோம்; உங்களுடைய இனிய கவிகளைக் கொண்டு உங்கட்கு விருப்பமான தெய்வத்தைத் துதித்தால் அக் கவிகள் மிகச் சிறந்த ஒளி பொருந்திய முடியையுடைய என் திருமகள் கேள்வனுக்குச் சேரும். (6) தகுதியான கொடையும் புகழும் எல்லை இல்லாமல் இருக்கின்றவனை, ஒப்பற்ற ஆயிரம் திருப்பெயர்களையும் உடைய பெருமானை அல்லாமல், கைகள் மேகத்தைப் போன்றவை வலிய தோள்கள் பெரிய மலைகளை ஒத்தவை என்று பூமியில் தூறுபோல் பயன் அற்று இருக்கின்ற ஒருவனைப் பார்த்து மெய் கலவாத பசும் பொய்களைப் பேசுவதற்கு யான் தகுதியுடையேன் அல்லேன் (7) பசுமையாலும் கிரட்சியாலும் செவ்வையாலும் மூங்கிலைக் காட்டிலும் மேம்மட்டுத் தனக்குத் தானே ஒத்த தோளையுடையவளான நப்பினைப் பிராட்டிக்குக் கேள்வனான இறைவனுடைய எல்லையில்லாதனவான பொருந்திய பெரிய புகழைப் பாடிக் கொண்டே சென்று உடலைக் கழித்து அவனுடைய தாளிணையில் புகுகின்ற காதலையுடையவனான யான் அழியக் கூடிய இம்மனிதர் களை என் வாய் கொண்டு என் சொல்ல வல்லேன்? (8) வாயால் மனிதர்களைப் பாடவல்ல கவிஞன் யான் அல்லேன்; ஆராயப்பட்ட குணங்களைக் கொண்டே வள்ளலாகிய ஆழிப்பிரான் எனக்கே இருக்கின்றான். ஒளியையுடைய இவ்வுலகத்தில் இன்பத்தையும் கொடுத்து, 'பரமபதத்தையும் நீ கண்டுகொள்வாய்' என்று கைங்கரிய சுகத்தையும் முறையாகக் கொடுப்பான். (9) காலம் உள்ளவரையிலும் இடைவிடாது நின்று இன்பதுன்பங்களை அநுபவிக்கின்ற இவ்வுடலை நீங்கிச் சென்று, பலகாலம் கழிந்த பின்னராயினும் நம்மைக்