பக்கம்:அர்த்த பஞ்சகம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயனை அடைவதற்குத் தடையாய் உள்ளவைகள் 131 நினைப்பதற்குப் புகுந்தால், பல யுகங்களும் இந்த உலகத்தையெல்லாம் ஆண்டு இறந்து போனவர்கள், கடல் எக்கரிலே உள்ள நுண்மையான மணல்களைக் காட்டிலும் பலர் ஆவர்; அவர்கள் அனைவரும் தாங்கள் வாழ்ந்த வீடுகள் இருந்த இடமும் தெரியாதபடி அழிந் தார்களேயன்றி, வேறு ஒன்றையும் பார்த்தோம் இல்லை; ஆதலால், பனைமரம் போன்ற கால்களையுடைய மதம் பொருந்திய யானையைக் கொன்ற கிருட்டிணனது திருவடிகளை வணங்குங்கள். (4) திருவருள் புரிதல் வேண்டும் என்று கூறுகின்ற அழகிய மிருதுவான கூந்தலையுடைய பெண்களோடு அழகிய குளிர்ந்த பரந்த பூக்களாலான படுக்கையிலே சேர்க்கை யால் உண்டான இன்பமாகிய அமுதை உண்டவர்கள் அந்நிலை கெட்டு, துணி முனனே தொங்கவும் பெண்கள் பலர் இழித்துக் கூறவும் செல்லுவார்கள்; ஆதலால் நீல மேனியையுடைய நம் மாயவனது திருநாமத்தைச் சொல்லி வாழுங்கள். (5) வாழ்ந்திருந்தவர்கள் வாழ்ந்தது பெரிய மழை நீரிலே தோன்றுகின்ற குமிழி போன்று அழிந்து அழிந்து நரகத் திலே விழுந்து அழுந்தினார்கள் என்பதே; அஃது அல்லாமல், அன்றுமுதல் இன்றுவரையிலும் வாழ்ந்த வர்கள் ஒரே தன்மையாக வாழ்ந்தே இருந்தார்கள் என்பதும் இல்லை; ஆதலால் நிலை பெற்ற பேற்றினைப் பெற வேண்டும் என்று இருந்தீர்களாகில், ஆழ்ந்து நிறைந்திருக்கின்ற கடலைப் படுக்கையாகவுடைய இறை வனுக்கு அடியவர் ஆகுங்கள். (6) 2. படுமழை மொக்குளில் பல்காலும் தோன்றி கெடுமிதோர் யாக்கையென் றெண்ணி' என்பது நாலடியார், 27